சுல்தான் இசுகந்தர் கட்டிடம்

ஜொகூர் பாரு மாநகரில் உள்ள சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப்படுத்துதல் வளாகம். From Wikipedia, the free encyclopedia

சுல்தான் இசுகந்தர் கட்டிடம்
Remove ads

சுல்தான் இசுகந்தர் கட்டிடம் (ஆங்கிலம்: Sultan Iskandar Building; மலாய் மொழி: Bangunan Sultan Iskandar அல்லது (BSI); சீனம்: 苏丹依斯干达大厦) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாநகரில் உள்ள சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப் படுத்துதல் (Customs, Immigration and Quarantine (CIQ) Complex) வளாகமாகும்.[1]

விரைவான உண்மைகள் சுல்தான் இசுகந்தர் கட்டிடம் Sultan Iskandar Building, பொதுவான தகவல்கள் ...

மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தின் வடக்கு முனையில் இந்த வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. மலேசியா-சிங்கப்பூர் எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைவதற்கான இரண்டு தரைவழி இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

Remove ads

பொது

ஜொகூர் சுல்தான் இசுகந்தரின் (Sultan Iskandar of Johor) நினைவாக இந்தக் கட்டிடத்திற்குப் பெயரிடப்பட்டது. தெற்கு ஒருங்கிணைந்த நுழைவாயில் திட்டத்தின் (Southern Integrated Gateway Project) ஒரு பகுதியாக, கம்போங் புக்கிட் சாகார் (Kampung Bukit Chagar), லும்பா கூடா அடுக்குமாடி குடியிருப்புகளின் (Lumba Kuda Flats) முன்னாள் தளத்தில் கட்டப்பட்டது.

இந்தக் கட்டிடம் 232,237 சதுர மீட்டர் (2,499,780 சதுர அடி) பரப்பளவைக் கொண்டது. மலேசியாவின் மிகப்பெரிய சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப்படுத்துதல் (CIQ) வளாகமாகும்.

ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு விரைவு சாலை

இந்தக் கட்டிடம் முன்னாள் ஜொகூர் பாரு சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப்படுத்துதல் வளாகமாக இருந்தது. அதுவே 2008-ஆம் ஆண்டில் புதுக்கட்டிடமாகச் செயல்படத் தொடங்கியது.[2]

மலேசியாவில் இருந்து, இந்தக் கட்டிடத்திற்குச் செல்லும் முக்கிய விரைவு சாலை, ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு விரைவு சாலை (Johor Bahru Eastern Dispersal Link Expressway) ஆகும்.

எல்லைப் பரிசோதனைக்குப் பிறகு, மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் வழியாக, சிங்கப்பூர் உட்லேண்ட்ஸில் உள்ள உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு (Woodlands Checkpoint) வாகனங்கள் செல்கின்றன.

Remove ads

கூறுகள்

குடிவரவு சோதனைச் சாவடி

Thumb
ஜொகூர் பாருவில் இருந்து வெளியேறுவதற்கான குடிவரவு சோதனைச் சாவடி
Thumb
சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தின் ஒரு பகுதி

குடிவரவு சோதனைச் சாவடியில் பேருந்துப் பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களுக்கு வெவ்வேறு சோதனைச் சாவடிகள் உள்ளன.

மலேசியாவுக்குள் நுழையும் வாகனங்களுக்கு 38 துணை முகப்புகளும் (Counters); மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் வாகனங்களுக்கு 39 துணை முகப்புகளும் கொண்ட சோதனைச் சாவடிகள் உள்ளன.

ஒவ்வொரு திசையிலும் 50 துணை முகப்புகள்

மலேசியாவிற்குள் நுழையும் விசையுந்துகளுக்கும் (Motorcycles); மற்றும் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் விசையுந்துகளுக்கும்; ஒவ்வொரு திசையிலும் 50 துணை முகப்புகள் உள்ளன.

விசையுந்து ஓட்டுபவர்களுக்கான பாதுகாப்புத் தானியங்கி அனுமதி அமைப்பு முறைமை (Secured Automated Clearance System for Malaysian Citizen Motorcyclists (M-BIKE); அனைத்து மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் (Motorcyclists) வழங்கப்படுகிறது. வெளிநாட்டு விசையுந்து ஓட்டுபவர்களுக்கு, அவர்களுக்கு எனத் தனியாகத் துணை முகப்புகள் உள்ளன.[3]

சுங்கச் சோதனைச் சாவடி

சுங்கச் சோதனைச் சாவடியில், வாகனங்களுக்காக 36 முகப்புகள் (Counters) உள்ளன. அவற்றில் மலேசியாவுக்குள் வருபவர்களுக்கு 20 முகப்புகள்; மற்றும் மலேசியாவை விட்டு வெளியேறுபவர்களுக்கு 16 முகப்புகள் உள்ளன.

தவிர விசையுந்துகளுக்கு 25 முகப்புகள் (Counters) உள்ளன. மலேசியாவுக்குள் வருபவர்களுக்கு 17 முகப்புகள்; மற்றும் மலேசியாவை விட்டு வெளியேறுபவர்களுக்கு 8 முகப்புகள் உள்ளன.

கடவுச் சீட்டு சாவடிகள்

சுங்கம், குடிவரவு, தனிமைப்படுத்தல் (CIQ) வளாகத்தில் உள்ள அனைத்துக் கட்டணப் பரிவர்த்தனைகளும்; ’தொடு செல்’ (Touch 'n Go) எனும் கடவுச் சீட்டு மின்னணு முறையில் நடத்தப் படுகின்றன.

சிங்கப்பூர் உட்லேண்ட்ஸ் சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் (Woodlands Checkpoint) இருந்து புறப்படும் அனைத்து வெளிநாட்டுப் பதிவு வாகனங்களும்; ஜொகூரை நெருங்குவதற்கு முன் தரைப்பாலத்தின் இடதுபுறத்தில் உள்ள பழையக் கட்டிடத்தில் தொடு செல் (Touch 'n Go) சீட்டை வாங்கலாம்.

Remove ads

கட்டணங்கள்

(ஆகத்து 1, 2014 முதல்)

மேலதிகத் தகவல்கள் வகுப்பு, வாகனங்களின் வகை ...

குறிப்பு: தொட்டு செல் (Touch 'n Go - டச் என் கோ) அட்டை அல்லது மின் பணப் பை (eWallet) வழியாக மட்டுமே பயணக் கட்டணங்களைச் செலுத்த முடியும். ரொக்கப் பணப் பரிமாற்றம் ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads