மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம்
ஜொகூர் பாரு மாநகரத்தையும் சிங்கப்பூர் உட்லேண்ட்ஸ், பகுதியையும் இணைக்கும் தரைப்பாலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் (ஆங்கிலம்: Johor–Singapore Causeway; மலாய் மொழி: Tambak Johor–Singapura; சீனம்: 新柔长堤) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாநகரத்தையும் சிங்கப்பூர் உட்லேண்ட்ஸ் பகுதியையும் இணைக்கும் தரைப்பாலம் ஆகும்.
இந்தத் தரைப் பாலம், 1.056-கிலோமீட்டர் (0.66 மைல்) நீளம் கொண்டது. ஒருங்கிணைந்த தொடர்வண்டி; வாகனங்களின் பாதைப் பாலமாகவும் திகழ்கின்றது. இதைச் சுருக்கமாக ‘சிங்கப்பூர் காஸ்வே’ என பொதுமக்கள் அழைப்பது வழக்கம்.
Remove ads
பொது
வரலாற்று ரீதியாக, 1998-ஆம் ஆண்டில் துவாஸ் இரண்டாவது இணைப்புப் பாலம் (Tuas Second Link) திறக்கப்படும் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே நில இணைப்பு இதுவாகத்தான் இருந்தது.
சிங்கப்பூரின் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கும்; ஜொகூர் பாரு சுல்தான் இஸ்கந்தர் கட்டிட்டத்தில் இருக்கும் சோதனைச் சாவடிக்கும்; இடையிலான தூரம் ஏறக்குறைய 2.4 கி.மீ. (1.5 மைல்) ஆகும்.
நீர்க் குழாய்ப் பாதை
இந்தத் தரைப் பாலத்தின் வழியாகச் சிங்கப்பூருக்குச் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் அனுப்பப் படுகிறது. சிங்கப்பூரில் சுத்திகரிக்கப்படும் நீர் மீண்டும் மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுகிறது. அதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே நீர்க் குழாய்ப் பாதையாகவும் இந்தத் தரைப்பாலம் செயல்படுகிறது.
உலகில் பரபரப்பாகப் பயன்படுத்தப்படும் எல்லைக் கடப்பு பாலங்களில் இந்த மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலமும் ஒன்றாகும், தினசரி 350,000 பயணிகள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியக் குடிமக்கள்
இந்தப் பயணிகளில் பெரும்பாலோர் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியக் குடிமக்கள். அத்துடன் கல்வி கற்கும் மாணவர்களும் அதிக அளவில் இந்தப் பாலத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
மலேசிய ரிங்கிட்டை விட சிங்கப்பூரின் டாலருக்கு நாணய வலிமை சற்றே அதிகம். அதன் காரணமாக வேலை வாய்ப்புகளைத் தேடி மலேசியர்கள் பலர் சிங்கப்பூருக்குச் செல்கின்றனர்.[1][2]
குடிவரவு அதிகாரிகளினால் இரு நாட்டு எல்லைகளும் கண்காணிக்கப் படுகின்றன. மலேசியாவில் ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில் சோதனைச் சாவடி (Southern Integrated Gateway (Malaysia); சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி (Woodlands Checkpoint (Singapore); ஆகிய இரு சோதனைச் சாவடிகள்.
Remove ads
வரலாறு
கட்டுமானம்
மேற்கோள் நூல்
- Lau, Albert; Alphonso, G. (2011). The Causeway. Malaysia and Singapore: National Archives of Malaysia and National Archives of Singapore. ISBN 9789814266895.
மேலும் படிக்க
- Ilsa Sharp, (2005), SNP:Editions, The Journey – Singapore's Land Transport Story. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-248-101-X
- ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு
- மலேசிய விரைவுச்சாலை முறைமை
வெளி இணைப்புகள்
- Google Maps link ஜொகூர் பாரு சிங்கப்பூர் தாரைப்பாலம்.
- சிங்கப்பூர் - மலேசியா எல்லையைக் கடப்பது
- சிங்கப்பூர் குடியேற்றத்தின் வரலாறு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads