சுவாமிநாராயண் அருங்காட்சியகம்
குசராத் மாநில அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீ சுவாமிநாராயண் அருங்காட்சியகம் (Shree Swaminarayan Museum) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள ஓர் அருங்காட்சியகமாகும். இது சுவாமிநாராயணனின் மூவாயிரம் தனிப்பட்ட பொருள்களைக் கொண்டுள்ளது. சுவாமிநாராயண் இந்து மதத்தில் கடவுளின் ஒரு அவதாரம் என்ற நிலையில் நம்புகின்றனர். அப்பொருள்கள் அனைத்து மக்களாலும் காணத்தக்க வகையில் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் ஆகும். [2]
இது, சுவாமிநாராயண சம்பிரதாயத்தில் உலகெங்கிலும் உள்ள கோயில்களில் காணப்படுகின்ற கடவுள் சுவாமிநாராயணனின் சொந்தப் பொருள்கள் அனைத்திலும் ஒரு ஒற்றுமையை உருவாக்கும் வகையில் அமைந்துள்ள முதல் திட்டம் ஆகும். இந்த அருங்காட்சியகம் 175,000-சதுர-அடி (16,300 m2) வளாகத்தில் 30,000 சதுர யார்டுகள் (25,000 m2) கட்டப்பட்ட உள்ளதாகும். இதன் மொத்த திட்ட செலவு ரூ. 10.5 மில்லியன் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. [2] இந்த அருங்காட்சியகத்திற்கான திட்டம் நாரநாராயண் தேவ் காடியின் முன்னாள் ஆச்சார்யரான தேஜேந்திரபிரசாத் அவர்களால் வடிவம் பெற்றது.
Remove ads
வரலாறு
தனது வாழ்நாளில், சுவாமிநாராயண் ஒவ்வொரு கிராமமாகப் பயணித்துச் சென்றபோது, தம்மைப் பின்பற்றுபவர்களின் வேண்டுகோளின் பேரில் அவர் தம்முடைய பொருட்களை 'பிரசாதி' என்று தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு வழங்கினார். அவரால் வழங்கப்பட்ட இந்த 'பிரசாதி' ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அனுப்பப்படுகிறது. அது இன்னும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு சொந்தமாக உள்ளது. [3] சுவாமிநாராயண் கோயில்கள் தமக்கென்று சில சொந்த சேகரிப்புகளைக் கொண்டுள்ளன. ஆனால் பொருட்கள் பொதுவாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வைக்கப்படுவதில்லை. அவற்றை வைத்திருப்போரும் அதனைப் பற்றிய வரலாற்றினை முழுமையாக அறிந்திருக்கவில்லை. இதை உணர்ந்த ஆச்சார்ய தேஜேந்திரபிரசாத்ஜி மகாராஜ் சுவாமிநாராயணனின் உடைமைகளைக் கொண்டு இந்த அருங்காட்சியகத்தை நிறுவ முயற்சித்துள்ளார். அவர் சுவாமிநாராயணனின் சில தனிப்பட்ட சேகரிப்புகளை வைத்திருந்தார். மேலும் பக்தர்களிடமிருந்து 'பிரசாதி' சேகரிக்க வேண்டும் என்று விரும்பினார். சுவாமிநாராயணனின் வாழ்க்கையைப் பற்றிய இந்தப் பொருள்களைக் கொண்டு ஒரு காட்சிக்கூடம் அமைக்க விரும்பினார். இந்த கனவை நிறைவேற்றவும், அவர் இந்த திட்டத்தில் முழு கவனம் செலுத்துவதற்காகவும் நார்நாராயண் தேவ் காடி தலைமைப்பொறுப்பைத் தன் மகன் கோஷலேந்திரபிரசாத்திற்கு வழங்கினார். [2] தனது 60 வது பிறந்தநாளை ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் கொண்டாட அவர் ஒப்புக்கொண்டார். பக்தர்கள் வழங்கிய அனைத்து நன்கொடைகள் மற்றும் கலைப்பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக சேர்க்கப்படவேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். இதுவே இந்த அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லாக அமைந்தது எனலாம்.
இந்த அருங்காட்சியகம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் 8 மார்ச் 2011 ஆம் நாளன்று திறக்கப்பட்டது. இதற்கான விழா 5 மார்ச் 2011 ஆம் நாளன்று தொடங்கி 2011 மார்ச் 9 நாள் வரை தொடர்ந்தது நடைபெற்றது. இந்தத் தொடர் விழாவில் 8,00,000 பேர் பங்கு கொண்டனர். [4] சடாயு என்ற பெயருடைய ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் திறப்பு விழாவுடன் இணைந்து, மார்ச் 8, 2011 ஆம் நாளன்று அருங்காட்சியக வளாகத்தில் ஒரு உறுப்பு தான முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் 900 பெண்களும், 700 பெண்களும் ஆக 1,600 பேர் கலந்துகொண்டதோடு பல உறுப்பு தானத்திற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். [5]
Remove ads
திட்ட அமைப்பு
இந்த அருங்காட்சியகத்தில் ஒரு அலுவலகம் மற்றும் விருந்தினர் மாளிகை ஆகியவை உள்ளன. மேலும் இந்த அருங்காட்சியகம் ஒரு ஆடியோ கண்காட்சி அமைப்பைப் பயன்படுத்தி பார்வையாளர்கள் அருங்காட்சியக வளாகத்தை சுற்றிவர ஏற்பாடு செய்துள்ளது. இதனுடன் சுவாமிநாராயணனின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படங்களைத் திரையிட ஒரு சிறிய திரையரங்கம் உள்ளது. ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காக ஒரு நூலகமும் உள்ளது. அனைத்து கலைப்பொருட்களையும் சிறப்பு கவனிக்கவும், பிரதிகளை விற்கவும் ஒரு பணிமனை கட்டப்பட்டுள்ளது.
Remove ads
சேகரிப்புகள்
இந்த அருங்காட்சியகத்தில் சுவாமிநாராயணனின் கையெழுத்துப்படிகள், பயன்படுத்திய ஆடைகள், ஆபரணங்கள், கால்தடங்கள், அவரது தலைமுடியின் துண்டுகள், நகங்கள் மற்றும் உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [6]
இந்த அருங்காட்சியகத்தின் தனித்துவமாக சுவாமிநாராயணனின் கையொப்பத்துடன் கூடிய ஆவணத்தைக் கூறலாம். அது இங்கு மட்டுமே உள்ளது. [6] இந்த ஆவணம் அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ சுவாமநாராயண் மந்திர் என்ற இடத்தில் நிலப்பிரச்சனையை கையாள தாகூர் குபேர்சிங்கிற்கு சுவாமிநாராயண் வழங்கிய வழக்கறிஞரின் அதிகாரமாகும். இந்த ஆவணம் அருங்காட்சியகத்தின் சிறப்புக் காட்சிப்பொருளாக அமைந்துள்ளது. [7]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

