சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில் From Wikipedia, the free encyclopedia

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்map
Remove ads

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், அமைவிடம் ...
Remove ads

பெயர்க்காரணம்

முருகப்பெருமான் இக்கோயிலில் 'தகப்பன் சுவாமி' எனப் புகழ் பெற்று விளங்குகிறார். மேலும் குருவாக இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமி நாதனாக இருப்பதால் சுவாமிமலை எனும் பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர், தாயார் மீனாட்சி எனும் பெயரில் உள்ளதால் இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.[1]

Remove ads

அறுபடை வீடு

முருகனின் அறுபடை வீடுகளில் இத்தலமும் ஒன்றாகும். தாளமும், சந்தமும் நிறைந்த மெய்ப்பொருள் துறைப் பாடல்கள் இயற்றப் பெற்ற தலமாகும். இத்தல முருகனைப் பற்றி அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ஆம் திருமுறையில் காணப்படுகின்றன.[2] கட்டு மலையாக அமைந்துள்ள குன்றின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார். உள் சுற்றில் தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுவாமிநாத சுவாமியின் சன்னதிக்கு எதிராக மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் உள்ளது இத்தலத்தின் சிறப்பாகும். இது இந்திரன் அளித்ததாக கருதப்படுகிறது. கருவறையில் முருகனின் வலது கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள் பரிகின்றார்.[1]

Remove ads

கும்பகோணம் சப்தஸ்தானம்

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேசுவரசுவாமி திருக்கோயில் (சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்) ஆகிய ஏழு ஊர்களில் நடைபெறும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கில் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது.[3] 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா நடைபெற்றது. இவ்விழா நடைபெறும் நாட்களில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து செல்லும் சிறப்பு பெற்ற தலமாகும்.[4]

அருகில் உள்ள மற்றொரு முருகன் கோயில்

இக்கோயிலுக்கு அருகேயுள்ள மற்றொரு முருகன் கோயில் ஏரகரம் கந்தநாதசுவாமி கோயிலாகும். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், ஆசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் ஏரகம் சுவாமிநாதசுவாமி கோயில் உள்ளது.[5]

குடமுழுக்கு

2015 செப்டம்பர் 9 அன்று காலையில், இக்கோயிலில் இராஜகோபுரம், மூலவர் விமானம், சுவாமி அம்பாள் விமானம், மற்றும் பரிவார தெய்வ விமானங்களுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது.[6]

குடமுழுக்கு படத்தொகுப்பு

தேரோட்டம்

ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 நவம்பர் 25 அன்று காலையில் இக்கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.[7][8]

திருவிழாக்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads