மகராசி (தொலைக்காட்சித் தொடர்)
2019 தமிழ் நாடக தொலைக்காட்சி தொடர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகராசி (Magaraasi) என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[2] இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் சித்திரம் இசுடியோசு ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குநர் எஸ். பி. இராஜ்குமார்[3] மற்றும் என். சுந்தரேஸ்வரன் ஆகியோர் இயக்கியுள்ளார்கள்.
இந்த தொடரில் திவ்யா ஸ்ரீதர், ஸ்ரிதிகா,[4] எஸ்.எஸ்.ஆர். ஆர்யான், சிறீரஞ்சனி, ராம்ஜி, விஜய்,ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி போன்ற பலர் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் அக்டோபர் 21, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 1 சூலை 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 1036 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதை சுருக்கம்
இந்த தொடரின் கதை ஹரித்துவாரில் பிறந்து வளர்ந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாரதி என்ற பெண். சிலரால் தேடப்படுகின்றார். அவர்களிடமிருந்து தப்பித்து தமிழ்நாடு செல்லும் புகையிரத்தித்தில் வருகின்றார். அங்கு தமிழை சந்திக்கின்றார். சந்தர்ப்ப சூழ்நிலையால் தமிழின் மனைவி போன்று நடிக்க நெருடுகிறது. ஆனால், புகுந்த வீட்டில் இவள் மருமகள் அல்ல என்கிற உண்மையை ஏற்படி தெரியவருகின்றது. இவர்களுக்குள் இருக்கும் மர்ம கதை என்பது தான் என்ன?
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
துணை கதாபாத்திரம்
- பிரவீனா (1-137) → சிறீரஞ்சனி[6] (138-) - செண்பகம் சிதம்பரம்
- ரியாஸ் கான் - பாண்டியன்
- தீபன் சக்ரவர்த்தி (1-137) → பூவிலங்கு மோகன் (138-) - சிதம்பரம்
- காயத்ரி யுவராஜ் (1-31) → திவ்யா கணேஷ் (34-137) → வனிதா ஹரிஹரன் (138–305) → அஷ்ரிதா ஸ்ரீதாஸ் (305-) - ராகினி தமிழரசன்
- மகாலட்சுமி - அன்பரசி
- அஸ்வினி - கௌதமி
- ராம்ஜி - சிவமணி
- விஷாலி - காயத்ரி
- மதுமிதா - இளவரசி
- தீபன் சக்கரவர்த்தி
- சிவாஜி மனோ
- ரவிசங்கர் - கதிரவன்
- சினேகா நம்பியார் (1–111) → ஸ்வேதா (112-) - பானுமதி கதிரவன்
- விஜய் ஆனந்த் - கெத்து மனோகர்
- ஓர்மை பாஸ் - வெண்மதி
- மிதுன் ராஜ்
- முதுகலை
- ஹரிஷ்
- யாழினி
Remove ads
நடிகர்களின் தேர்வு
இந்த தொடரில் கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்த 'திவ்யா ஸ்ரீதர்' என்பவர் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[7] அத்தியாயம் 414 முதல் பிரபல தொலைக்காட்சி நடிகை ஸ்ரிதிகா என்பவர் சக்தி மற்றும் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ஆர். ஆர்யான் என்பவர் புவி என்ற கதாபாத்திரத்திலும் நடிகை சிறீரஞ்சனி என்பவர் தமிழ் அரசு மற்றும் புவியின் தாயாக செண்பகம் என்ற கதாபாத்திரத்திலும் நடிக்க, ராம்ஜி, விஜய்,ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஒளிபரப்பு நேரம்
இந்த தொடர் அக்டோபர் 21, 2019 முதல் 24 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது.26 ஏப்ரல் 2021 முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
மொழி மாற்றம்
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
- இந்த தொடர் இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads