செந்தூரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செந்தூரம் 1998 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ், தேவயானி, ராதிகா மற்றும் மூர்த்தி நடிப்பில், இளையராஜா இசையில், சங்கமன் இயக்கத்தில், ஆர். பி. சுந்தரலிங்கம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2].
Remove ads
கதைச்சுருக்கம்
சிறையில் இருக்கும் கத்தாழை (மூர்த்தி) தன் கடந்த காலத்தை நினைக்கிறான்.
கத்தாழை மனவளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளி. அவனது அப்பாவித்தனத்தை பயன்படுத்தி ஊரார் அவனிடம் வேலை வாங்குகின்றனர். அவனுக்குத் திருமணம் செய்துகொள்ள மிக விருப்பம். ஆனால் அவ்வூரைச் சேர்ந்த பெண்களுக்கு அவனைத் திருமணம் செய்ய விருப்பமில்லை. முத்து மாணிக்கம் (பிரகாஷ் ராஜ்) அந்த கிராமத்தின் மரியாதைக்குரிய பெரிய மனிதர். தேவதா (ராதிகா) அவர் மனைவி. இவர்களுக்குக் குழந்தை இல்லை.
மேகலா என்கிற ஒத்த ரோசா (தேவயானி) அந்த கிராமத்திற்கு வருகிறாள். திருவிழாக்களில் நடனமாடி சம்பாதித்தத் தன் தாயின் இறப்புக்குப் பின் மேகலா நடனமாடும் தொழிலை செய்கிறாள். அவ்வாறு நடனமாட சென்ற இடத்தில் அவளை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். அதனால் அந்தத் தொழிலை விட்டுச்செல்ல நினைக்கும் அவளுக்கு அடைக்கலம் தருகிறார் முத்து மாணிக்கம்.
முத்து மாணிக்கத்தின் பண்ணை வீட்டில் தங்கி அவரின் ஆதரவில் வாழ்கிறாள். அவளையும் முத்து மாணிக்கத்தையும் தொடர்புபடுத்தி ஊரார் தவறாக பேசுகிறார்கள். கத்தாழைக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோகிறது. ஊரார் அவனைக் கேலிசெய்கின்றனர். தனக்கொரு ஆதரவு வேண்டுமென்று எண்ணும் மேகலா, கத்தாழையைத் திருமணம் செய்கிறாள். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். முத்து மாணிக்கம் மேகலாவைத் தனக்கு சொந்தமாக்க எண்ணுகிறார். அவரின் மனைவி தேவதா கர்ப்பமாகிறாள்.அதன்பின் நடப்பது மீதிக்கதை.
Remove ads
நடிகர்கள்
- மூர்த்தி - கத்தாழை
- தேவயானி - ஒத்த ரோசா (மேகலா)
- பிரகாஷ்ராஜ் - முத்து மாணிக்கம்
- ராதிகா - தேவதா
- ஆர். சுந்தர்ராஜன் - சடையப்பன்
- வையாபுரி
- ஜீவா - வைதேகி
- அனுஜா - சிவகாமி
- ஏ. பழனி
- வெற்றி
- திடீர் கண்ணய்யா
- வெள்ளை சுப்பையா
- மேனேஜர் சீனு
- எம்.எல்.ஏ. தங்கராஜ்
- மதுரை பன்னீர்
- ஜெமினி ஸ்ரீதர்
- வண்டிக்காரன் பிரகாஷ்
- அமிர்தலிங்கம்
- கோவிந்தாச்சார்யா
- விஜயாம்மா
- ப்ரேமி
- வதனா
- ஆர். கே. ராணி
- சுப்புலக்ஷ்மி
- கே. மீனா
இசை
படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் வாலி, புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன்[3][4][5].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads