சென்சி மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சான்சி மாகாணம் அல்லது ஷான்ஸி அல்லது அஞ்சல்முறைப்படி சென்சி மாகாணம் (Shaanxi, எளிய சீனம்: 陕西; பின்யின்: ⓘ; அஞ்சல்: Shensi) என்பது மக்கள் சீனக் குடியரசில் வடமேற்கு வட்டாரத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது லோயிசு அல்லது ஹுவாங்டு எனப்படும் பீடபூமியின் ஒரு பகுதியாக உள்ளது.
Remove ads
பெயர்
சென்சி என்ற பெயரின் பொருள் ஷானுக்கு மேற்கிலுள்ள நிலம் என்பதாகும். ஷான் என்பது லோயிசு பீடபூமியிலிருந்து வட சீனச்சமவெளிக்குப் பாய்ந்துவரும் மஞ்சள் ஆற்றின் குறுகலான கணவாயின் பழைய பெயராகும். இது இப்போதைய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஷன்சூ மாவட்டத்தில் உள்ளது.
வரலாறு
சென்சி சீன நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு சூ அரசமரபு காலத்தில் இருந்து டாங் அரசமரபு காலம் வரையிலான 1,100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம்வரை பதிமூன்று சிற்றரசு மரபினர் தங்களின் தலைநகரங்களை இம்மாகாணத்தில் நிறுவியிருந்தனர். மாகாணத்தின் முக்கிய நகரமும் தற்போதைய தலைநகரமுமான சிய்யான் நகரம் சீனாவின் பண்டைய நான்கு தலைநகரங்களில் ஒன்றாகும். மேலும் இது ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அரோபியா வழியாக வந்த பட்டுச் சாலையின் கிழக்கு முனையாக விளங்கியது.
Remove ads
நிலவியல்
மாகாணத்தின் ஒரு பகுதி ஓர்டோஸ் பாலைவனத்தின் பகுதியாகவுள்ளது. இதன் எல்லையாக வடக்கில் உள் மங்கோலியாவும், மாகாணத்தில் மைய பகுதியில் லோயிசு பீடபூமியும், மாகாணத்தின் தென்மத்தியில் கிழக்கு மேற்காக கின் மலைத்தொடரும் உள்ளன.
கடிகாரச் சுற்றில் சென்சி மாகாண எல்லைகளாக வடக்கு மற்றும் வடகிழக்கில் ஷாங்ஸி மாகாணம், கிழக்கில் ஹெனான் மாகாணம், தென்கிழக்கில் ஹுபேய் மாகாணம், தெற்கில் சோங்கிங், தென்மேற்கில் சிச்சுவான், மேற்கில் கான்சு, வடமேற்கில் நிங்ஜியா, வடக்கில் உள் மங்கோலியா ஆகியவை உள்ளன.
ஆண்டுச் சராசரி வெப்பநிலை 8 முதல் 16 °செ (46 முதல் 61 °பாரங்கீட்) ஆகும். சனவரிமாத சராசரி வெப்பநிலை −11 முதல் 3.5 °செல்சியஸ் வரையும் (12.2 முதல் 38.3 °பாரங்கீட்), சூலை மாத சராசரி வெப்பநிலை 21 முதல் 28 °செ வரையும் (70 முதல் 82 °பாரங்கீட்) உள்ளது.
பொருளாதாரம்
19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை, சென்சியில் இருந்து விலங்குத்தோல்கள், ஒயின், மது, கஸ்தூரி ஆகியன ஏற்றுமதி செய்யப்பட்டன. சென்சி வணிக மக்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலும் செய்துவந்தனர். சென்சி வணிகர்கள் பொதுவாக ஐரோப்பிய விலங்குத்தோல்கள், கைக்கடிகாரங்கள், சீன மொழி புத்தகங்கள், துணி ஆகியவற்றை இறக்குமதி செய்தனர்.[4]
படிம எரிபொருளும் உயர் தொழில்நுட்பத்துறையும் சென்சி மாகாணத்தின் இரண்டு மிகப்பெரிய தொழிற்துறைகளாகும். 2009 ஆம் ஆண்டில் மாகாணத்தின் நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியானது சீனாவில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.[5] மேற்கு சீனாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவற்றைக் கொண்டுள்ள இம்மாகாணத்தில் வானூர்தி மற்றும் விண்வெளித்துறைகள் வேகமாக வளர்ச்சிகண்டுள்ளன. இவை நாட்டின் உள்நாட்டு வர்த்தக வான் வணிகத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, மற்றும் கருவிகள் உற்பத்தியில் 50% மேற்பட்ட அளவில் நிறைவு செய்கிறன.[5]
2011 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,239 பில்லியன் ரென்மின்பியாக இருந்தது (அமெரிக்க $196.7 பில்லியன்), மேலும் ஒரு நபருக்கான GDP 21,729 ரென்மின்பியாக (அமெரிக்க $3,179) இருந்து, சீனநாட்டின் தரவரிசையில் 17ஆம் இடம் வகிக்கிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
சென்சி மாகாணத்தில் ஹான் சீனகளே கிட்டத்தட்ட பெரும்பான்மை இன மக்களாக உள்ளனர். ஊய் மக்கள் இம்மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் ஓரளவு உள்ளனர். சென்சி மாகாணம் பண்டைய சீன நாகரிகத்தின் மையத்தில் ஒன்றாகும்.
சமயம்
சென்சி மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் (தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட) சீன பௌத்தம் போன்றவை பரவலாக உள்ளன. 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 7.58% மக்கள் முன்னோர்களை வழிபடும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் மக்கள் தொகையில் 1.57% மக்கள் கிருத்துவர்கள் ஆவர்.[6] மக்கள் தொகையில் 90.85% பேர் மதம் பற்றிய விவரங்களை கொடுக்கவில்லை இவர்கள் சமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது பழங்குடி மதமாகவோ, புத்தமதம், கன்பூசியம், தாவோ அல்லது சிறுபான்மையினரான முஸ்லிம்களாகவோ இருக்கலாம்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads