சென்னபட்டணம்

From Wikipedia, the free encyclopedia

சென்னபட்டணம்map
Remove ads

சென்னபட்டணம் (Channapatana) இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் ராமநகரம் மாவட்ட நகரம் மற்றும் வட்டமாகும். உள்ளூர் வாசிகள் சன்னபட்ணம் என்றும் அழைக்கின்றனர்.

விரைவான உண்மைகள் சென்னபட்டணம் Channapatna, நாடு ...
Remove ads

நிலவியல்

சென்னபட்டணம் பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது பெங்களூரிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும், மைசூரிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சென்னபட்டணம் கடல் மட்டத்திலிருந்து சுமார் சராசரி 739 மீட்டர் (2424 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

இந்நகரில் உள்ள சாலைகளின் மொத்த நீளம் 108.20 கி.மீ. ஆகும். நாளொன்றுக்கு 70.50லிட்டர்/நபர் நீர் வழங்கப்படுகிறது. கோடையில் வெப்பநிலை 32° செண்டிகிரேடாகவும் குளிர்காலத்தில் 19° செண்டிகிரேடாக இருக்கும்.

Remove ads

புள்ளிவிவரங்கள்

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சென்னபட்டண நகராட்சியில் 36.098 ஆண்கள், 35.844 பெண்கள் என மக்கள் தொகை 71,942ஆக இருந்தது.[1]

பொம்மைகள்

Thumb
சென்னபட்டண பொம்மைகள்
Thumb
சென்னபட்டண பொம்மைகள்

இந்த நகரம் மர பொம்மைகள் மற்றும் அரக்கு பாத்திரங்களுக்குப் பிரபலமானது. சென்னபட்டணம் பொம்மைகளின் நகரம் (கன்னடம்:"கோம்பேகலா நாகரா ") என்று அழைக்கப்படுகிறது. இந்த பொம்மைகள் பாரம்பரிய மற்றும் மேம்பட்ட சிறிய அளவிலான தொழிலகங்களில் தயாரிக்கப்படுகின்றன. கச்சாப் பட்டு, அரிசி, கேழ்வரகு மற்றும் தேங்காய் உற்பத்தி சென்னப்பட்டணா வட்டத்தின் முக்கிய தயாரிப்புகளாகும்.[2] சென்னபட்டண பொம்மைகளின் தோற்றம் திப்பு சுல்தானின் காலத்திலே தோன்றியது. மர பொம்மை தயாரிக்கும் கலையில் உள்ளூர் கைவினைஞர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக பெர்சியாவிலிருந்து கைவினைஞர்களை வரவழைத்தார். இந்த பொம்மைகளுக்கு இந்திய அரசு புவியியல் சார்ந்த குறியீடு வழங்கியுள்ளது.[3][4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads