செபாவு மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செபாவு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Sebauh; ஆங்கிலம்: Sebauh District; சீனம்: 民都鲁县) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பிந்துலு பிரிவில் ஒரு மாவட்டமாகும். இதன் எல்லைகளாக மிரி மாவட்டம், பாராம் மாவட்டம், காப்பிட் பிரிவு, பெலாகா மாவட்டம் மற்றும் தாதாவு மாவட்டம் ஆகியவை உள்ளன.[1]
செபாவு நகரம் (Sebauh Town), செபாவு மாவட்டத்தின் நிர்வாகம் மற்றும் பொருளாதார மையமாக விளங்குகிறது.
செபாவு மாவட்டம்; பிந்துலு நகரத்திற்கு வடகிழக்கே 50 கி.மீ. (31 மைல்); சிபு மாவட்டத்திற்கு வடகிழக்கே 216 கி.மீ. (134 மைல்); மிரி மாவட்டத்திற்கு தென்மேற்கே 200 கி.மீ. (120 மைல்) தொலைவில் அமைந்து உள்ளது.
Remove ads
இனக் குழுக்கள்
செபாவு மாவட்டம் இபான் மக்கள், சீனர், மெலனாவ், மலாய் மற்றும் ஒராங் உலு மக்களின் தாயகமாக விளங்குகிறது. பெரும்பாலான இபான்கள் செபாவு மாவட்டத்தின் கிராமப்புறங்களில், அதாவது பாண்டான், இலபாங், துபாவு மற்றும் காகசு ஆகிய கிராமங்களில் பரவி உள்ளனர்.
மெலனாவு மக்கள் அல்லது பிந்துலு மெலனாவு மக்கள் (Melanau Bintulu) செபாவு நகரம் மற்றும் செபாவு கிராமப்புற பகுதிகளில் மிகுதியாக உள்ளனர். செபாவு மாவட்டத்தில் 13 கிராமங்கள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 291 நீளவீடுகள் உள்ளன.[2]
மலாய் மக்கள்
மலாய் மக்களில் (Malay People) பலர் தொடக்கத்தில் செபாவு பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இருப்பினும், உள்ளூர் மக்களுடன் குறிப்பாக மெலனாவு மக்களுடன் (Melanau People) திருமணம் செய்து கொண்டது; மலாய் மக்களை செபாவுவில் உள்ள முக்கிய இனங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளது.
சீனர் மக்கள் செபாவு நகரில் அதிக அளவில் உள்ளனர். சிலர் கோலா கெபுலு (Kuala Kebulu) மற்றும் செலாலோங்கு (Jelalong) கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். கென்னியா (Kenyah), காயான் (Kayan), தாதாவு (Tatau), பெனான் (Penan) மற்றும் புனான் (Punan) போன்ற ஒராங் உலு (Orang Ulu) இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் செபாவு மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளனர்.[3]
வெளிநாட்டுத் தொழிலாளர்கள்
காட்டு மரங்கள் வெட்டுதல் மற்றும் காட்டு மரப் பொருள்கள் தொழில் காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.
Remove ads
சான்றுகள்
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads