செமாராங்
இந்தோனேசியாவின் நடுச்சாவக மாகாணத்தின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செமாராங் நகரம் இந்தோனேசியாவின் சாவகத் தீவின் வட கரையில் அமைந்துள்ள ஒரு பெரு நகராகும். மத்திய சாவக மாகாணத்தின் தலை நகரான செமாராங் நகரின் பரப்பளவு 225.17 சதுர கிலோ மீற்றர் ஆகும். ஒன்றரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வாழும் இந்நகரம் இந்தோனேசியாவின் ஐந்தாவது பெரிய நகரமாகும்.[1] இந்நகரின் அமைவிடம் 6°58′S 110°25′E ஆகும். நெதர்லாந்து காலனியாதிக்க காலத்திலிருந்து இன்று வரை இந்நகரம் இந்தோனேசியாவின் முக்கிய துறைமுக நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வகை நிலங்களையும் ஒருங்கே கொண்ட இந்நகரில் இந்தோனேசியச் சீனர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

Remove ads
நிருவாகம்
செமாராங் நகரம் 16 நிருவாக மாவட்டங்களாகவும் 177 உப-மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 1906 வரையில் இந்நகரம் பூபதி (ஆளுநர்) ஒருவரின் கீழேயே இருந்து வந்தது. 1906 இன் பின்னர் நகரபிதா (மேயர்) ஒருவரின் கீழ் உள்ளது.
மொழி
இந்தோனேசியாவின் பல பாகங்களிலிருந்தும் இங்கு வந்து வசிப்போர் பல்வேறு மொழிகளைப் பேசக்கூடியோராயிருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாக வாழும் சாவக மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது அது மிகவும் குறைவானதே. இங்குள்ள மக்கள் அநேகமாக சாவகம் அல்லது இந்தோனேசிய மொழியே பேசுகின்றனர். இங்கு அதிகமாக வாழும் சீனர்கள் ஹோக்கியன் அல்லது மாண்டரின் மொழியைப் பேசுகின்றனர்.
தரைத்தோற்றம்
இந்நகரம் சாவகத் தீவின் மத்திய சாவக மாகாணத்தின் வட கரையில் அமைந்துள்ளது. இங்கு கடலை அடுத்ததாகவே மலைப்பாங்கான நிலப் பகுதிகளைக் காணலாம். செமாராங் நகரைச் சூழவுள்ள பகுதிகளில் அதிகளவில் புகையிலைப் பயிர்ச் செய்கை இடம் பெறுகிறது.
காலநிலை
செமாராங் அயன மண்டல மழைக்காட்டுக் காலநிலையையும் பகுதியளவில் அயன மண்டல பருவப் பெயர்ச்சிக் காலநிலையையும் கொண்டுள்ளது.
Remove ads
சகோதர நகரங்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads