செம்பரா மலைமுடி

From Wikipedia, the free encyclopedia

செம்பரா மலைமுடிmap
Remove ads

செம்பரா என்பது கேரளாவின் வயநாடு மாவட்டத்திலேயே உயரமான மலைமுடி ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 2100 மீ. உயரமானது. மெப்படி நகரத்துக்கு அருகிலுள்ள இது மாவட்டத் தலைநகரான கல்பெட்டா-விலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. வயநாடு மலைக்கூட்டங்களின் பகுதியான இது மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டின் நீலகிரி மலைத்தொடர்களையும் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள வெல்லாரி மலைகளையும் இணைக்கும் விதமாக இச்சிகரம் அமைந்துள்ளது. மெப்படி நகரிலிருந்து நடந்தே மலையுச்சியை அடையலாம். செம்பரா மலை உச்சியை அடைவதற்கு மூன்று மணி நேரம் ஆகும். மலை ஏறுவதற்கு மேப்படி நகரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெறுவது அவசியம். காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மலையேற்றத்துக்கான கருவிகளையும் வழிகாட்டிகளையும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண அடிப்படையில் ஏற்பாடு செய்து தருகின்றது. வழிகாட்டிகளின் உதவி இல்லாமல் செம்பரா மலை ஏறுவது சற்றுச் சிரமமாக இருக்கும்.

விரைவான உண்மைகள் செம்பரா மலைமுடி Chembra Peak, உயர்ந்த புள்ளி ...
Remove ads

மலை ஏற்றம்

Thumb
செம்பரா மலையும் இதயத் தடாகமும்

மலை ஏற நுழைவுச் சீட்டு வாங்கிய இடத்திலிருந்து சுமார் இரண்டு கி.மீ. சமவெளியில் தேயிலைத் தோட்டங்கள் வழியே எளிதான வழியில் பயணிக்க வேண்டி இருக்கும். அடுத்து சருகுகள், கிளைகளுக்கிடையே சற்றுச் சரிவான உள்ள மலைப் பகுதியில் ஏற வேண்டி இருக்கும். இப்பாதையில் வழுக்குப் பாறைகளும் மாவு போன்ற மண்ணும் இருப்பதால் மிகவும் கவனத்துடன் ஏறுவது அவசியம். இதைக் கடந்தபின் உயர்ந்த மரங்களுடன் கூடிய வனப்பகுதி. இங்கு மலை செங்குத்தாக இருப்பதால் ஏறுவது மிகவும் சிரமாக இருக்கும். இங்கும் வழுக்கும் விதத்தில் பாறைகள் உள்ளன. இதைக் கடந்து சென்றால் இதய வடிவில் ஓர் அழகான ஏரி இருக்கிறது. இதை ’இதயத் தடாகம்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஏரி எப்போதும் வறட்சி அடைந்தது இல்லை என நம்பப்படுகிறது. பச்சை மலைக்கு நடுவில் உள்ள இந்த நீல வண்ண ஏரியைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். இந்த ஏரியைத் தாண்டி மேலே ஏறுவதற்கு வனத்துறை அனுமதிப்பதில்லை. வனவிலங்குகளின் அபாயம் இருப்பதால் முகாம் அமைத்து தங்குவதற்கும் அனுமதியில்லை.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads