செம்பிரமிடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செம்பிரமிடு (Red Pyramid, also called the North Pyramid) பண்டைய எகிப்தின், தச்சூர் நகரத்தில் மூன்று பெரிய பிரமிடுகளில் ஒன்றாகும். இது வடக்கு எகிப்தில் உள்ள கெய்ரோ நகரத்திற்கு அருகே அமைந்த பண்டைய தச்சூர் நகரத்தில் உள்ளது. இதனை கட்டியவர் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்ச மன்னர் சினெபெரு (கிமு 2613 - கிமு 2589) ஆவார். இதனைப் பெரிய அளவிலான சுண்ணக்கற்களைக் கொண்டு கட்டினார். இந்த பிரமிடு தச்சூர் நகரத்தில் அமைந்த மூன்று பிரமிடுகளான வளைந்த பிரமிடு மற்றும் கருப்பு பிரமிடுகளில் ஒன்றாகும். இது எகிப்தின் மூன்றாவது பெரிய பிரமிடு ஆகும்.

இப்பிரமிடு 105 மீட்டர்கள் (344 அடி) உயரம், அடிப்பாகம் 220 மீட்டர்கள் (722 அடி) அடிப்பாகமும், கனபரிமானம் 1,694,000 கன சதுர மீட்டர்கள் (59,823,045 cu ft) கனபரிமாணமும் கொண்டது.
Remove ads
படக்காட்சிகள்
- செம்பிரமிடுவிற்கு செல்லும் பாதை
- பிரமிடின் கல்லறையின் உயர்ந்த கூரை
- செம்பிரமிடின் களம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads