தச்சூர் (பண்டைய நகரம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தச்சூர் (Dahshur)[transliteration 1] (in English often called Dashur; , வார்ப்புரு:Lang-cop Dahchur[1]) தச்சூர் நகரத்தில் பண்டைய எகிப்திய பார்வோன்களின் இறந்த அரச குடும்பத்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி பிரமிடுகளில் அடக்கம் செய்யும் கல்லறை நகரம் ஆகும். இந்த நெக்ரோபோலிசு கீழ் எகிப்தில் பாயும் நைல் நதியின் மேற்கு க்ரையில் 40 கிலோமீட்டர் தொலைவில், கெய்ரோவிற்கு தெற்கே பாலைவனத்தில் தச்சூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது.[2]தச்சூரில், பழைய எகிப்து இராச்சியம் முதல் எகிப்தின் மத்தியகால இராச்சியம் வரையியில் (கிமு 2613 – 2589) கட்டப்பட்ட சினெபெருவின் செம்பிரமிடு மற்றும் வளைந்த பிரமிடு, கருப்பு பிரமிடு, வெள்ளை பிரமிடு, மூன்றாம் செனுஸ்ரேத்த்தின் பிரமிடு மற்றும் மூன்றாம் அமெனம்ஹத்தின் பிரமிடுகளால் பெரிதும் அறியப்படுகிறது. தச்சூர் பிரமிடுகளின் தொகுதி, 1979-இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. தச்சூரில் உள்ள நெக்ரோபொலிசுவின் பரப்பளவு 16,203 ஹெக்டேர் (62.5615 சதுர மைல்) ஆகும். மேலும் தச்சூர் ஒரு தொல்லியல் களம் ஆகும்.
இதனருகில் உலகப் பாரம்பரியக் களமான சக்காரா நகரம் உள்ளது.

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads