பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எகிப்திய நாகரிகம் உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்று. இன்று காணக் கிடைக்கும் மிகப் பழைய கட்டிடங்கள் பல இப்பண்பாட்டைச் சேர்ந்தவையாகும். இக் கட்டிடங்களின் மூலம் எகிப்திய நாகரிகம் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறியக் கூடியதாக உள்ளது.[1][2] நைல் நதி பள்ளத்தாக்கு ஒரு பழமையான செல்வாக்கு பெற்ற நாகரிகத்தால் உருவாக்கப்பட்ட பண்டைய எகிப்திய கட்மைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இங்குள்ள பழமையான கீசாவின் பெரிய பிரமிடு மற்றும் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் ஆகியவை புகழ் பெற்ற கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களாகும்.
பண்டைய எகிப்து கட்டிடங்களில், மரம் பற்றாக்குறை காரணமாக, சூரிய வெப்பத்தில்-சுட்ட மண்செங்கல் மற்றும் கல் (முக்கியமாக சுண்ணாம்பு, மணற்பாறை மற்றும் கருங்கல் ஆகிய இரண்டு முக்கிய கட்டுமான பொருட்களை கணிசமான அளவு பயன்படுத்தினர்.
பழைய எகிப்து இராச்சிய மன்னர்கள் முதன்முதலாக கல்லறைகள் மற்றும் கோயில்கள் கட்டுவதற்கு கற்களைப் பயன்படுத்தினர். அரச அரண்மனைகள், கோட்டைகள், கோவில்கள், நகரங்களின் சுவர்கள் மற்றும் கோவில் வளாகங்களில் உள்ள துணை கட்டிடங்கள் கட்ட செங்கற்கற்களைப் பயன்படுத்தினர்.
Remove ads
கீசா பிரமிடுகளின் தொகுதி
எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எல்லைப் பகுதியில் கீசாவின் மேட்டு நிலப் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இத்தொகுதி நைல் நதிக்கரையில் அமைந்துள்ள பழைய கிசா நகரத்திலிருந்து 8 கி.மீ. (5 மைல்) தொலைவில் உட்புறமாகப் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. இது, கெய்ரோ நகர மத்தியில் இருந்து தென்மேற்காக சுமார் 25 கி.மீ. (15மைல்) தொலைவில் உள்ளது. இத்தொகுதியிலுள்ள ஒரு நினைவுச் சின்னமான கிசாவின் பெரிய பிரமிடே பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் ஒரே அதிசயமாகும்.
Remove ads
இதனையும் காண்க


படக்காட்சிகள்
- தூண்களின் போதிகைகள்
- 9 வகையான போதிகைகள்
- இசிஸ் கடவுளின் கோயில் தூண்களின் வரிசை
- அல்-உக்சுர் கோயில் தூண்கள்
- வண்ணம் தீட்டப்பட்ட மணற்கல்லால் ஆன போதிகை
- கிமு 2353-2323 காலத்திய கருங்கல் தூண்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads