செம்மார்புக் குக்குறுவான்

பறவை இனம் From Wikipedia, the free encyclopedia

செம்மார்புக் குக்குறுவான்
Remove ads

செம்மார்புக் குக்குறுவான் அல்லது கன்னான் அல்லது திட்டுவான் குருவி [2] (coppersmith barbet ) என்பது ஒருவகை குக்குறுவான் ஆகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.

விரைவான உண்மைகள் செம்மார்புக் குக்குறுவான், காப்பு நிலை ...
Remove ads

விளக்கம்

செம்மார்புக் குக்குறுவான் கனத்த அலகுடன், நெற்றியும் மார்பும் சிவப்பாக இருக்கும் உடலின் மேற்பகுதி பச்சை நிறமாக இருக்கும். தொண்டையும், கன்னங்களும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மஞ்சள் நிற அடிப்பகுதி சாம்பல் மற்றும் கறுப்பு நிறக் கோடுகள் கொண்டிருக்கும். கூடு கட்டும் பருவத்தில், இறகுகளில் தேய்மானம் ஏற்படுவதால், மேல் முதுகின் இறகுகள் நீல நிறத்தில் தோன்றும்.[3] இது 15–17 செமீ (5.9–6.7 அங்குலம்) நீளமும் 30–52.6 கிராம் (1.06–1.86 அவுன்ஸ்) எடையும் கொண்டது.[4] இது குட்டையான வாலுடையது.

Remove ads

வகைப்பாடு

2014 ஆம் ஆண்டு வரை செம்மார்புக் குக்குறுவானின் ஒன்பது துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[4]

  • துணையினம் என்று பரிந்துரைபக்கபட்ட P. h. haemacephalus லூசோன் மற்றும் மிண்டோரோவில் காணப்படுகின்றது.
  • இந்திய செம்மார்புக் குக்குறுவான் P. h. indicus வடகிழக்கு பாக்கித்தானிலிருந்து இலங்கை, சீனா, வியட்நாம், சிங்கப்பூர் வரை பரவியுள்ளது
  • P. h. roseus சாவகம் மற்றும் பாலியில் காணப்படுகிறது
  • P. h. intermedia பனாய், குய்மராஸ், நீக்ரோஸ் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது
  • P. h. delicus சுமித்திராவில் காணப்படுகிறது
  • P. h. mindanensis மிண்டானோவில் காணப்படுகிறது
  • P. h. celestinoi சமர், கட்டன்டுவனேஸ், பிலிரான், லெய்டே ஆகிய இடங்களில் காணப்படுகிறது
  • P. h. cebuensis காணப்படும் இடம் செபு மாகாணம்
  • P. h. homochroa தப்லாஸ் தீவில் காணப்படுகிறது
Remove ads

பரவலும் வாழிடமும்

Thumb
அரசு சிரிகிட் பூங்காவில் செம்மார்புக் குக்குறுவான்

இது தான் வாழிட எல்லை முழுவதும், தோட்டங்கள், தோப்புகள் மற்றும் அரிதாக வனப்பகுதிகளில் வாழ்கிறது. கூடுகளை தோண்டுவதற்கு ஏற்ற மரங்கள் கொண்ட வாழ்விடங்களில் முக்கியமாக காணப்படுகிறது.

பழனி மலைகளில் இது 1,200 மீ (4,000 அடி) கீழே காணப்படுகிறது.[5] வட இந்தியாவில், இது 910 மீ (3,000 அடி) வரை வெளி இமயமலையின் பள்ளத்தாக்குகளில் காணப்படுகிறது. வடமேற்கு இந்திய மாநிலங்களிலும், அசாமில் உள்ள ஈரக்காடுகளிலும் இது அரிதாக காணப்படுகிறது.[6]

ஒலி எழுப்புதல்

இந்தப் பறவையின் அழைப்பானது சத்தமாக 'டொக்கு…டொக்கு…டொக்கு' என்னும் ஒலியாக இருக்கும், இது பாத்திரம் செய்பவர்கள் சுத்தியால் செப்புத் தகட்டை அடிப்பதூ ஓத்திருக்கும். இதனால் இதற்கு ஆங்கிலத்தில் Coppersmith barbet என்ற பொருத்தமான பெயர் வந்தது. இப்பறவை வாழும் பகுதிக்கு ஏதாவது தீங்கு வந்தால் விநோத ஒலி எழுப்பும் தன்மை கொண்டது. இதனாலேயே பளியர் என்ற பழங்குடி மக்கள் இப்பறவையை திட்டுவான் குருவி என்று அழைப்பார்கள்.[2]

உணவு

இப்பறவை ஆல், அரசு, அத்தி மரப் பழங்களை விரும்பி உண்ணும். அவ்ப்போது ஈசல் போன்ற பூச்சிகளையும் உண்ணும்.[3][7] இது மலர் இதழ்களையும் உண்கிறது.[8] இது ஒவ்வொரு நாளும் இதன் உடல் எடையை விட கிட்டத்தட்ட 1.5 முதல் 3 மடங்கு வரை பழங்களை உண்கிறது.[9]

இனப்பெருக்கம்

இவை இந்தியாவில் பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலும், இலங்கையில் திசம்பர் முதல் செப்டம்பர் வரையிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இரு பாலினத்தவையும் ஒரு குறுகிய கிளையின் அடிப்பகுதியில் பொந்தை தோண்டுகின்றன. பொந்துக்குள் கூடு அமைத்து தங்குகின்றன. பெண் பறவை மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். இருபாலினத்தவையும் அடைகாக்கின்றன. அடைகாக்கும் காலம் நன்கு அறியப்படவில்லை, ஆனால் சுமார் இரண்டு வாரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் இரண்டு குஞ்சுகள் விரைவாக அடுத்தடுத்து வளர்க்கப்படுகின்றன.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads