செம்மீன் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

செம்மீன் (திரைப்படம்)
Remove ads

தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் என்னும் நாவலின் கதையை மூலமாகக் கொண்டு, 1965-ல் ராமு கார்யாட்டு இத்திரைப்படத்தை இயக்கினார். மது, சத்யன், கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், ஷீலா, எஸ். பி. பிள்ளை, அடூர் பவானி, பிலோமின ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

விரைவான உண்மைகள் செம்மீன், இயக்கம் ...

1965-ல் சிறந்த திரைப்படத்திற்கான இந்திய அரசின் தங்கத் தாமரை விருது கிடைத்தது.[2].

Remove ads

நடிப்பு

  • சத்யன் – பளனி
  • ஷீலா – கறுத்தம்ம
  • மது – பரீக்குட்டி
  • கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் – செம்பன் குஞ்ஞு
  • அடூர் பவானி – சக்கி
  • லலா – பஞ்சமி
  • சி. ஆர். ராஜகுமாரி – பாப்பிகுஞ்ஞு
  • அடூர் பங்கஜம்
  • கோட்டயம் செல்லப்பன்
  • பறவூர் பரதன்
  • பிலோமின
  • ஜெ. எ. ஆர். ஆனந்த்
  • கோதமங்கலம் அலி

பாடல்கள்

பாடல் வரிகள்: வயலார் ராமவர்மா இசை: சலில் சௌதுரி

மேலதிகத் தகவல்கள் #, பாடல் ...
Remove ads

கதை

ஏழை மீனவனின் மகள் கறுத்தம்மா மற்றும் மொத்த மீன் வியாபாரியும் முஸ்லீம் இளைஞனான பரீக்குட்டி ஆகியோர் படகு அருகே சந்தித்துப் பேசுவதிலிருந்தே கதை தொடங்குகிறது. அவர்களின் காதலுக்குக் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளால் தடை ஏற்படுகிறது. இதற்கிடையில் கருத்தம்மாவின் பேராசைபிடித்த பெற்றோர் பரீக்குட்டியிடம் உள்ள பணத்தைவாங்கி சொந்தமாக படகுகள் வாங்கிக்கொண்டு பரிக்குட்டியை ஏமாற்றிவிடுகின்றனர். பரீக்குட்டியை விட்டுப் பிரிந்து திரிகுன்னத்து மீனவன் பழனியை திருமணம் செய்துகொண்டு சென்றுவிடுகிறாள் கறுத்தம்மா. திருமணத்திலிருந்தே கணவனுக்கு உற்ற மனைவியாக அன்பொழுக நடந்துகொள்கிறாள். இருந்தாலும் அவ்வப்போது வரும் பரீக்குட்டியின் நினைவுகளில் இருந்து முடியாமலும் தவிக்கிறாள். இருவரின் மனப்போராட்டங்களுக்குப் பிறகு எதிர்பாராமல் நிகழும் பரீக்குட்டி, கருத்தம்மா ஆகியோரின் சந்திப்பும் அந்த சந்திப்பைக் கடலன்னை எப்படி ஏற்றுக்கொள்கிறாள் என்பதும்தான் கதை.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads