ஷீலா (நடிகை)

1942ல் பிறந்த இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

ஷீலா (நடிகை)
Remove ads

ஷீலா, திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் கிலாரா ஆப்ரகாம். இவர் மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரேம் நசீரும் இவரும் இணைந்து அதிகப் படங்களில் நடித்துள்ளனர். 1980-ல் ஸ்போடனம் என்ற திரைப்படத்துடன் தற்காலிகமாக நடிப்பைக் கைவிட்டார். பின்னர் 2003-ல் சத்யன் அந்திக்காடு இயக்கிய மனசினக்கரெ என்ற திரைப்படத்தில் மீண்டும் நடித்தார்.

விரைவான உண்மைகள் ஷீலா, பிறப்பு ...

திரைப்பட இயக்குனரான பாபு சேவியர், இவரது கணவர். இவர் மகன் விஷ்ணுவும் திரைத்துறையில் பணியாற்றுகிறார்.

Remove ads

வாழ்க்கைக்குறிப்பு

இவர் கேரளத்தின் திருச்சூரில் பிறந்தவர். திருச்சூர் கணிமங்கலம் சுதேசி ஆன்டணி, கிரேசி ஆகியோர் இவரது பெற்றோர்.[1] இவர் ஷீலா என்ற பெயரில் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

திரைப்படத்துறை

ஷீலாவை 13வது வயதில் நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகத்துறைக்கு அறிமுகப்படுத்தினார். இவரை தன் எஸ். எஸ். ஆர் நாடக மன்றத்தில் சேர்த்துக் கொண்டு வேலை கொடுத்தார். எம்.ஜி.ஆர். நாயகனாய் நடித்த பாசம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நிறைந்தார். இவர் செம்மீன், அஸ்வமேதம், கள்ளிச்செல்லம்மா, அடிமைகள், ஒருபெண்ணின்றெ கத, நிழலாட்டம், அனுபவங்ஙள் பாளிச்சகள், யட்சகானம், ஈற்ற, ஸரபஞ்சரம், கலிக, அக்னிபுத்ரி, பார்யமார் ஸூக்‌ஷிக்குக, மிண்டாப்பெண்ணு, வாழ்‌வேமாயம், பஞ்சவன் காடூ, காபாலிக உட்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரேம் நசீர், சத்யன், மது, ஜெயன், சுகுமாரன், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

Remove ads

நடித்த திரைப்படங்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads