செம்மொழியான தமிழ் மொழியாம் (பாடல்)

From Wikipedia, the free encyclopedia

செம்மொழியான தமிழ் மொழியாம் (பாடல்)
Remove ads

செம்மொழியான தமிழ் மொழியாம் (உலக செம்மொழி தமிழ் மாநாட்டு பாடல்) என்பது ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவான ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இது முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் எழுதப்பட்டது. இதில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பல முன்னணி தமிழ்க் கலைஞர்கள் பங்களித்திருந்தனர். இது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 இன் அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடல். இந்தப் பாடல் கர்நாடக, கிராமிய, ஒலியியல், சூஃபி இசை, ராக் மற்றும் ராப் உள்ளிட்ட பல்வேறு இசை பாணிகளின் ஒரு கலந்திணைப்பைக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் "செம்மொழியான தமிழ் மொழியாம்", ஏ. ஆர். ரகுமான் இன் இசையில் ...
Remove ads

பின்னணி

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010, அதிகாரப்பூர்வமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, என்பது சர்வதேச தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், பிரபலங்கள், போன்றோர் சந்தித்த ஒரு தமிழ் சந்திப்பு ஆகும். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.[1] செம்மொழி என்ற தலைப்பில் இந்தப் பாடலை முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி, இந்த மாநாட்டிற்காக எழுதினார். இப்பாடலை தமிழ்த் திரைப்பட இயக்குநர் கௌதம் மேனன் இயக்கினார்.

இந்தப் பாடலை பதிவு செய்து முடிக்க ஏ. ஆர். ரகுமானுக்கு இரண்டரை மாதங்கள் ஆனது.[2] இப் பாடல் வெளியீட்டின்போது பெரிதும் பாராட்டப்பட்டது.[3]

Remove ads

வெளியீடு

"செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல் வெளியீடு மே 15 2010 அன்று நடத்தப்பட்டது. 18 மே, அன்று இந்தப் பாடல் ஏ. ஆர். ரகுமானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும், மற்றும் மே 21 இல் தி இந்து இதழின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் இலவசப் பதிவிறக்கமாக கிடைத்தது.[4]

கலைஞர்கள்

பின்வரும் பின்னணி பாடகர்கள் இந்தப் பாடலில் குரல் கொடுத்துள்ளனர். முதல் தோற்றம் வரிசையில் பட்டியல் உள்ளது:

நடிகைகள்

பாடலில் தமிழ் விக்கிப்பீடியா

இந்தப் பாடலிற்கான நிகழ்படத்தில் தமிழ் விக்கிப்பீடியா திரைக்காட்சி இடம் பெற்றிருக்கிறது.[5] இந்தக் காட்சி நிகழ்படத்தில் 1:52 ஆவது நிமிடத்தில் இருக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads