செலாயாங் நகராட்சி

From Wikipedia, the free encyclopedia

செலாயாங் நகராட்சி
Remove ads

செலாயாங் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Selayang; ஆங்கிலம்: Selayang Municipal Council); (சுருக்கம்: MPS) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம்; மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை நிர்வகிக்கும் நகராட்சி ஆகும். இந்த நகராட்சி மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[2]

விரைவான உண்மைகள் செலாயாங் நகராட்சி Selayang Municipal CouncilMajlis Perbandaran Selayang, வரலாறு ...
Thumb

செலாயாங் நகராட்சியின் தலைமையகம், பண்டார் பாரு செலாயாங்கில் (Bandar Baru Selayang) உள்ளது. 1 சனவரி 1977 முதல் கோம்பாக் மாவட்ட மன்றம் (Majlis Daerah Gombak) என அழைக்கப்பட்ட இந்த நகராட்சிக்கு 1 சனவரி 1997-இல் நகராட்சி தகுதி வழங்கப்பட்டது.

Remove ads

பொது

பொறுப்புகள்

கோம்பாக் மாவட்டம்

கோம்பாக் மாவட்டம் (Daerah Gombak) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு தென்கிழக்கில் மலேசியத் தலைநகரம் கோலாலம்பூர் அமைந்து உள்ளது. கிழக்கில் கெந்திங் மலை உள்ளது.

கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் (Klang Valley) அமைந்து உள்ளது. தவிர, பெரும் கோலாலம்பூர்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் தான் அமைந்து உள்ளன.

கூட்டரசு பிரதேசம்

கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்: பத்து ஆராங்; குவாங்; ரவாங்; குண்டாங்; கோம்பாக்; செலாயாங்; கெப்போங்; மற்றும் உலு கிள்ளான்.

1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு கூட்டரசு பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது.

1997-ஆம் ஆண்டு வரை, ரவாங் நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் பண்டார் பாரு செலாயாங், இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றம் செய்யப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads