கோம்பாக் மாவட்டம்

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கோம்பாக் மாவட்டம்
Remove ads

கோம்பாக் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Gombak; ஆங்கிலம்: Gombak District; சீனம்: 鹅唛县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு தென்கிழக்கில் மலேசியத் தலைநகரமான கோலாலம்பூர்; கிழக்கில் கெந்திங் மலை அமைந்து உள்ளன.

விரைவான உண்மைகள் கோம்பாக் மாவட்டம், நாடு ...

கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. தவிர, கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் தான் உள்ளன. கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்: பத்து ஆராங்; குவாங்; ரவாங்; குண்டாங்; கோம்பாக்; செலாயாங்; கெப்போங்; மற்றும் உலு கிள்ளான்.

1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு வரை, ரவாங் நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் பண்டார் பாரு செலாயாங், இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.

Remove ads

நிர்வாகப் பகுதிகள்

செலாயாங் நகராட்சி மன்றம் (மேற்கு); அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (கிழக்கு); ஆகிய நகராட்சி மன்றங்களால் கோம்பாக் மாவட்டம் நிர்வாகம் செய்யப் படுகிறது.

கோம்பாக் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்

  1. பத்து (Batu)
  2. ரவாங் (Rawang)
  3. செதபாக் (Setapak)
  4. உலு கிள்ளான் (Ulu Klang)

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

கோபாக் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

கோம்பாக் மாவட்டத்தில் 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,868 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.[5]

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads