சேத்தி மண்டலம்

From Wikipedia, the free encyclopedia

சேத்தி மண்டலம்map
Remove ads

சேத்தி மண்டலம் (Seti zone) (நேபாளி: सेती अञ्चलகேட்க) தெற்காசியாவின் தூர மேற்கு நேபாளத்தில் தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் திப்பயால் சில்கத்தி நகரம் ஆகும். இம்மண்டலம் ஐந்து மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இம்மண்டலத்தின் தங்கதி நகரம் ஒரு துணை மாநகராட்சியும் ஆகும்

Thumb
சேத்தி மண்டலத்தின் மாவட்டங்கள்

மாவட்டங்கள்

சேத்தி மண்டலத்தின் தராய் சமவெளியில் கைலாலீ மாவட்டம் மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளில் அச்சாம் மாவட்டம் மற்றும் டோட்டி மாவட்டம் மற்றும் இமயமலைப் பகுதிகளில் பஜாங் மாவட்டம் மற்றும் பாசூரா மாவட்டம் என ஐந்து மாவட்டங்கள் உள்ளது.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சேத்தி மண்டலத்தின் மொத்த மக்கள் தொகை 15,75,003 ஆகும். [1] இம்மண்டலத்தில் நேபாள மொழி மற்றும் டோட்டி மொழிகள் பேசப்படுகிறது. வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு இம்மண்டல மக்களின் முக்கியத் தொழிலாகும்.

புவியியல் தட்ப வெப்பம்

புவியியல்

சேத்தி மண்டலத்தின் தெற்கில் தராய் சமவெளியும், நடுவில் மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளும், வடக்கில் இமயமலைப் பகுதிகளும் உள்ளன. சேத்தி மண்டலத்தின் வடக்கில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியும், கர்ணாலி மண்டலமும் மேற்கில் மகாகாளி மண்டலமும், கிழக்கில் பேரி மண்டலம் மற்றும் வடகிழக்கில் கர்ணாலி மண்டலமும், தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

தட்ப வெப்பம்

சேத்தி மண்டலம் கடல் மட்டத்திலிருந்து முன்னூறு முதல் ஐயாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. எனவே இம்மணலத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை என நான்கு நிலைகளில் காணப்படுகிறது. [2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads