சேஷ்நாக் ஏரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சேஷ்நாக் ஏரி (Sheshnag Lake) (சமசுகிருதம்: शेषनाग झील) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் அமைந்த நன்னீர் ஏரியாகும்.[1] இந்த ஏரி இமயமலையின் அடிவார நகரமான பகல்காமிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமர்நாத் செல்லும் வழியில் இமயமலையில் 3,590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சேஷ்நாக் ஏரி 1.1 கிலோ மீட்டர் நீளம், 0.07 கிலோ மீட்டர் அகலம் கொண்டது.

விரைவான உண்மைகள் சேஷ்நாக் ஏரி, அமைவிடம் ...
Remove ads

புராண வரலாறு, புவியியல்

இந்து சமய புராணங்களின் படி, சேஷ்நாக் எனில் பாம்புகளின் அரசனான ஆதிசேஷன்[2][3] இந்த ஏரியில் உறைந்து வாழ்பவர் என இந்துக்களின் தொன்மை நம்பிக்கை ஆகும்.[4] சேஷ்நாக் ஏரி இந்துக்களின் தொன்மையான புனித யாத்திரை தலங்களில் ஒன்றான அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

சேஷ்நாக் ஏரி பல வகையான மீன் இனங்களை கொண்டது.[5][6] குளிர்காலத்தில் கடும் பனிப் பொழிவினால் இந்த ஏரி பனியால் உறைந்து விடுகிறது.[7] கோடைகாலத்தில் இவ்வேரியின் பனிகட்டிகள் உருகி பகல்காம் நகரத்தில் லித்தர் ஆறாக பாய்கிறது.

Remove ads

போக்குவரத்து

சேஷ்நாக் ஏரி காஷ்மீரிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும், அனந்தநாக் நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும், அமர்நாத் செல்லும் இமயமலையின் அடிவார நகரமான பகல்கம் நகரத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும், பஞ்சதரணிக்கு தெற்கே 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[8] பகல்காம் நகரத்திலிருந்து அமர்நாத் அடிவாரப் பகுதியான சந்தன்வாரி எனுமிடதிற்கு சிற்றுந்துகள் மூலம் அடைந்து, பின் சந்தன்வாரியிலிருந்து ஏழு கிலோ தொலைவில் உள்ள சேஷ்நாக் ஏரியை குதிரைகள் அல்லது பல்லக்குகள் மூலம் அடையலாம். அமர்நாத் குகைக் கோயில் சேஷ்நாக் ஏரியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சூன் மாதம் முதல் செப்டம்பர் முடிய சேஷ்நாக் ஏரியை பார்க்க நல்ல காலம் ஆகும். டிசம்பர் முதல் மார்ச்சு மாதம் வரை ஏரி பனிகட்டியால் உறைந்து விடும்.

Remove ads

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads