அனந்தநாக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனந்தநாக் (Anantnag) (əˈnæntˌnæg/nɑːg) காஷ்மீர மொழியில் அனந்தநாக் என்பதற்கு நீரூற்றுகள் மற்றும் ஏரிகளின் உறைவிடம் எனப்பொருள். அனந்தநாக், இந்தியாவின், தெற்கு காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். அனந்தநாக் நகராட்சி மன்றம் இந்நகரை நிர்வகித்து வருகிறது. மக்களில் பெரும்பாலனவர்கள் இசுலாமியர்கள். அமர்நாத் கோயிலுக்கு செல்பவர்கள் அனந்தநாக் வழியாக செல்வது எளிது.
Remove ads
அமைவிடம்
அனந்தநாக் கடல் மட்டத்திலிருந்து 5300 அடி உயரத்தில் உள்ளது.[1]. ஸ்ரீநகரிலிருந்து 53 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜம்முவிற்கு வடக்கே 204 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
அமர்நாத் கோயில் அடிவார நகரமான பகல்கம் அனந்தநாக்கிலிருந்து 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்
மார்த்தாண்ட சூரியன் கோயில்

இந்தியத் தொல்லியற் களங்களில் அனந்தநாக் மார்தாண்ட சூரியன் கோயில் முக்கியமானது. இச்சூரியன் கோயில் கி. பி., 650-இல் காஷ்மீர கார்கோட மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் சுல்தான் சிக்கந்தர் புட்ஷிகான் என்பவர் இச்சூரியன் கோயில் முழுவதுமாக தகர்க்க ஒரு வருட காலம் ஆயிற்று.[3] இம்மார்த்தாண்டன் சூரியன் கோயில் இடுபாடுகளுக்கிடையே தற்போதும் காட்சியளிக்கிறது.இந்திய விடுதலைக்குப்பின் பழமையான இச்சூரிய கோயிலை இந்தியத் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது,[4]
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அனந்தநாக் நகர மக்கட்தொகை 1,10,000 ஆக உள்ளது. அனந்தநாக் மாவட்டத்தின் மக்கட்தொகை 11,70,144ஆக உள்ளது.[5]. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 937 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. எழுத்தறிவு விகிதம் 66% ஆக உள்ளது. இது தேசிய எழுத்தறிவு விகிதமான 64.3%ஐ விட அதிகம்.
பொருளாதாரம்
அனந்தநாக்கில் ஆப்பிள், கடுகு, பாசுமதி அரிசி மற்றும் கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. அனந்தநாக் கம்பளி சால்வைகளுக்குப் பெயர் பெற்றது. காஷ்மீர் சமவெளியில் அனந்தநாக் ஒரு பொருளாதார மையமாக உள்ளது.[6] சுற்றுலாத் துறையின் மூலம் அதிகம் வருவாய் பெரும் நகரங்களில் அனந்தநாக்கும் ஒன்று.
இருப்புப் பாதை
ஸ்ரீநகரை அனந்தநாக் நகரத்துடன் ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை இணைக்கிறது.
தட்பவெப்பம்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads