பகல்காம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்ட நகரம் From Wikipedia, the free encyclopedia

பகல்காம்map
Remove ads

பகல்காம் (Pahalgam) அல்லது பெகல்காம் (காஷ்மீரி உச்சரிப்பு: பெகல்காம் :'மேய்ப்பர்களின் கிராமம்') [1] ) என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் வடக்கே அமைந்துள்ள காஷ்மீர் ஒன்றியப் பகுதியில், அனந்தநாக் மாவட்டத்தின் வடக்கே அமைந்த மலைவாழிடமும் சுற்றுலாத் தலமும் ஆகும்.[2] அனந்தநாக் நகரத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில், லித்தர் பள்ளத்தாக்கில், லித்தர் ஆற்றங்கரையில், இமயமலையில் 7200 அடி உயரத்தில் உள்ளது.

விரைவான உண்மைகள் பகல்காம், நாடு ...

பகல்காம் நகரம், பகல்காம் வருவாய் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். ஆண்டுதோறும் சூலை -ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும் அமர்நாத் யாத்திரையின் போது, பகல்காம் ஊருக்கு வெளியே யாத்திரிகர்களின் தற்காலிகத் தங்கும் பெரிய முகாம்கள் ஆண்டுதோறும் அமைக்கப்படுகிறது. அமர்நாத் யாத்திரை தொடங்குமிடமான சந்தன்வாரி முகாம், பகல்காமிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Remove ads

புவியியல்

பகல்காம் 34.01°N 75.19°E / 34.01; 75.19யில் உள்ளது.[3] இமயமலையில் 2740 மீட்டர் உயரத்தில் அமைந்த லித்தர் பள்ளத்தாக்கில், பகல்காம் நகரம் உள்ளது.

சிறீநகருக்கு கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும்; ஜம்முவுக்கு வடக்கே 260 கி.மீ. தொலைவிலும் பகல்காம் நகரம் உள்ளது.

போக்குவரத்து

ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு நகரத்திலிருந்து அனந்தநாக் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மக்கள்தொகை பரம்பல்

13 நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட பகல்காம் நகரத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 9,264 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 5,541 ஆகவும்; பெண்கள் 3,723 ஆகவும் உள்ளனர். மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1245 (13.44%) ஆகவுள்ளனர். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 672 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 64.87% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 40.01 % ஆகவும் உள்ளது.

பகல்காமின் மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 80.09%; இந்துக்கள் 17.64%; சீக்கியர்கள் 1.38%; பிற சமயத்தவர்கள் 0.89% ஆக உள்ளனர்.[4]

நிர்வாகம்

பகல்காம் நகர நிர்வாகத்தை மேற்கொள்ள 13 உறுப்பினர்கள் கொண்ட பகல்காம் வளர்ச்சி மன்றம் செயல்படுகிறது.

தட்பவெப்பம்

பகல்காம் நீண்ட குளிர்காலத்தையும்; குறுகிய மிதமான கோடைகாலத்தையும் கொண்டது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், பகல்கம், மாதம் ...
Remove ads

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

Thumb
பகல்காமில் பாயும் லித்தர் ஆறு

பகல்காமின் 90% விழுக்காடு பசுமை மாறா ஊசியிலைக் காடுகளைக் கொண்டது. இக்காட்டில் வாழும் விலங்கினங்களில் கஸ்தூரி மான்களும், மலை ஆடுகளும், பழுப்பு கரடிகள், சிறுத்தைகள், சாம்பல் குரங்குகள், காட்டு முயல்கள் முதலியன வாழ்கிறது.

பறவைகளில் கிரிப்பன் கழுகுகள், நீலப்பாறை புறாக்கள், பனிக் கோழிகள், காட்டுக் காகங்கள் முதலியன உள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள்

பகல்காம் ஊரில் சுற்றுலா வருபவர்களுக்கான பல தங்கும் விடுதிகள் உள்ளது. மேலும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வேண்டிய கூடாரங்கள், குதிரைகள், உணவு போன்றவவைக்களுக்கு ஏற்பாடு செய்து தரும் நிறுவனங்கள் உள்ளன.

அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள்:

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads