சைதாப்பேட்டை
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைதாப்பேட்டை (Saidapet) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு புறநகராகும். இப்பகுதியை சுற்றியிருக்கும் முக்கியப் பகுதிகள் தி. நகர், கிண்டி, மாம்பலம், நந்தனம், மற்றும் கே கே நகர் ஆகும். சென்னையின் முதன்மையான சாலையான அண்ணா சாலை இப்பகுதி வழியாகச் செல்கிறது.
Remove ads
கோவில்கள்
- காரணீசுவரர் கோவில் - இக்கோவில் மிகவும் பழமையான மற்றும் பிரபலமானதுவும் ஆகும். இங்குள்ள அம்மனின் பெயர் சொர்ணாம்பிகை. இங்கு அழகான தெப்பக்குளம் உள்ளது.
- சிவசுப்பிரமணியர் கோவில், சைதை செங்குந்த கோட்டம்
- சௌந்தரேசுவரர் கோவில்
- கடும்பாடி அம்மன் கோவில்
- சந்தன விநாயகர் கோவில்
- அங்காளம்மன் கோவில்
- பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
- இளங்காளியம்மன் கோவில்
- சுப்பிரமணிய சுவாமி கோவில்
- கரர்க்கட விநாயகர் கோவில்
- லக்ஷ்மி நாராயணர் கோவில்
- முருகர் கோவில்
சித்தர் கோவில்
பிறமதக் கோவில்கள்
Remove ads
சிறப்பு அம்சங்கள்
- மிகப்பழமையான ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி இங்கு உள்ளது. சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன் இந்த பயிற்சிப்பள்ளியில் படித்தவர். நெ. து. சுந்தரவடிவேலுவும் இங்கு பயின்றவர்.[4]
- இங்குள்ள மீன் சந்தை (மார்க்கெட்) மிகப் பரவலானதும் பிரபலமானதும் கூட.
- தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறையின்கீழ் இயங்கும் பன்முக கால்நடை மருத்துவமனை இங்கு அமைந்துள்ளது.
- முந்தைய காலத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தோடு இணைந்திருந்தபோது பஞ்சாயத்துத் தணிக்கைக்காகப் பிரிக்கப்பட்ட சைதாப்பேட்டை வட்டமும் திருப்பெரும்புதூர் வட்டமும் இணைந்த மூன்றாம் பகுதிக்கும், செங்கற்பட்டுக்கும் தலைநகராக, தனி நகராட்சியாக சைதாப்பேட்டை விளங்கியது. [5]
Remove ads
படங்கள்
- சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்
- சைதாப்பேட்டை குருலிங்க சாமிகள் ஜீவசமாதி கோயில்
- சைதாப்பேட்டை ஞானவிநாயகர் கோயில்
மேற்கோள்கள்
அமைவிடம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads