கிண்டி
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிண்டி (ஆங்கிலம்: Guindy) தமிழ்நாட்டின் சென்னை நகரத்திலுள்ள ஒரு நகர்ப் பகுதியாகும். இது சென்னையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கே அடையாறும் வடக்கே கோட்டூர்புரமும் உள்ளன. இங்கு புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் ராஜ்பவன் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள வளாகத்தின் முந்தைய கிண்டி பொறியியற் கல்லூரி, இந்தியாவின் பழமையான பொறியியற் கல்லூரிகளுள் ஒன்றாகும். மேலும் கிண்டியில் ஒரு பாம்புப் பண்ணையும் சிறுவர் பூங்காவும் உள்ளன. இவற்றை அடுத்து இராசாசி, காமராசர் மற்றும் அண்ணல் காந்தி நினைவிடங்கள் உள்ளன. தாம்பரம்–சென்னைக் கடற்கரை சுற்றுப்புற வழித்தடத்தின் நிறுத்தமாக தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகாமையில் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்தியாவிலே முதன் முதலில் உருவான CIPET அமைந்துள்ளது
Remove ads
மேற்கோள்கள்
அமைவிடம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads