சோமபுரம் மகாவிகாரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோமபுரம் மகாவிகாரை (Somapura Mahavihara (Bengali: সোমপুর মহাবিহার Shompur Môhabihar) , வங்காள தேசத்தில் உள்ள நவகோன் மாவட்டத்தின் பஹர்புரில் உள்ள பௌத்த மகாவிகாரையாகும்.
இம்மகாவிகாரையை கிபி எட்டாம் நூற்றாண்டில், பாலப் பேரரசர் தர்மபாலர் நிறுவினார்.
1985ல் சோமபுர மகாவிகாரையை, யுனெஸ்கோ நிறுவுனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[2][3]
Remove ads
கட்டிடக் கலை
நாற்கர வடிவத்தில் அமைந்த சோமபுரம மகாவிகாரை, பௌத்த பிக்குகள் தங்குவதற்கும், தியானிப்பதற்கும் 177 அறைகளும், மையப் பகுதியில் ஒரு பௌத்த தூபியும் கொண்டது.
27 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோமபுரம் மகாவிகாரை தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்த போது, சிறிய தூபிகளும், பல அளவுகளில் சுடுமண், கருங்கல் சிற்பங்களும், கல்வெட்டுகளும், நாணயங்களும், பீங்கான் பாண்டங்களும், இந்து, பௌத்த, சமண சமயச் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டது. [4][5][6]
கடவுட் சிலைகள்
இங்கு கிடைத்த தொல்பொருட்கள், சோமபுரம் விகாரையின் அருகில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவைகளில்;
- சாமுண்டி களிமண் சிலை
- சீதள தேவி செம்மணற்சிலை
- உடைந்த கருங்கல் விஷ்ணு சிலை
- களிமண்ணால் செய்த கீர்த்தி சிலை
- கருங்கல்லில் வடித்த உடைந்த லெட்சுமி நாராயனன் சிலை
- உமாதேவியின் கருங்கல் சிலை
- களிமண்ணால் செய்த கௌரி சிலை
- களிமண் நந்தி சிலை
- கருங்கல்லில் செய்த விஷ்ணு சிலை
- சூரிய தேவன் சிலை
- மானசதேவியின் களிமண் சிலை
Remove ads
படக்காட்சிகள்
- சோமபுரம் மகாவிகாரை வளாகத்தின் கட்டமைப்புகள்
- மைய விகாரத்தின் அடியில் உள்ள சிற்பங்கள்
- சோமபுர விகாரையின் மாதிரி வடிவம்
- சுடுமண் சிலைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads