சோமேஸ்வரா கோவில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோமேசுவரர் கோயில் என்பது தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், அரேபிய கடலின் கரையில் மங்களூரிலிருந்து 13 கி.மீ. (8.1 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் 'ருத்ரபாத சேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த தலத்தில் பித்ரு காரியங்கள் (இறந்த முன்னோருக்கு செய்யும் இறுதிச் சடங்குகள்) நிகழ்த்தும் ஒரு இடமாகவும் உள்ளது.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் அலுபா வம்ச மன்னரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கோயில், பனவாசியின் கந்தம்பாக்களின் நிர்வாக ஆட்சியின் கீழும், 12 ஆம் நூற்றாண்டில் உல்லாலா அரசர்களின் நிர்வாகத்தின் கீழும் இருந்துள்ளது. கோவிலில் காணப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் இரண்டாம் தேவ ராயன் காலத்தில் ராஜகுரு ஸ்ரீ கிரியாஷகிருத்ய தேவவாடியா என்பவரால் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.[1]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads