பட்காம் மாவட்டம்
சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்காம் மாவட்டம் (Budgam District), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் காஷ்மீர் சமவெளியில் உள்ள பதினொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் ஷியா பிரிவு இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர். [1]
Remove ads
நிர்வாகம்
ஸ்ரீநகர் மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரிந்து 1979 ஆம் ஆண்டில் பட்காம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
மாவட்ட எல்லைகள்
வடக்கில் பாரமுல்லா மாவட்டம் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டம், தெற்கில் புல்வாமா மாவட்டம், தென்மேற்கில் பூஞ்ச் மாவட்டம் பட்காம் மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
1,361 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பட்காம் மாவட்டம் சராரி செரீப், பீர்வா, பட்காம், சாடூரா, கான்சாகிப் மற்றும் காக் என ஆறு வருவாய் வட்டங்களை கொண்டது.[2] மேலும் கிராமப்புற வளர்ச்சிக்காக பீர்வா, நாகம், பட்காம், பி கே போரா, கான் சாகிப், காக், நர்பால் மற்றும் சாடூரா என எட்டு ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.[3]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பட்காம் மாவட்டத்தின் மக்கள் தொகை 7,35,753 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 398,041; பெண்கள் 355,704 ஆக உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 554 வீதம் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 894 பெண்கள் வீதம் உள்ள்னர். மாவட்டத்தின் சராசரி எழுத்தறிவு விகிதம் 56.08 விழுக்காடாக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 66.30 விழுக்காடாகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 44.85 விழுக்காடாகவும் உள்ளது. இம்மாவ்ட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 155,202 ஆக உள்ளது. [4]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads