சோட்டானிக்கரை கோவில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோட்டாணிக்கரை பகவதி கோவில் (ஜோதின்னக்கரை என்ற பெயரின் மழுவல் அதாவது பராசக்தி ஜோதி உருவில் நின்று மும்மூர்த்திகளுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காட்சி கொடுத்த இடம்) கேரளத்தில் மிகவும் பெயர் பெற்ற இந்து மதத்தினர் போற்றும் அன்னை இறைவியான பகவதி கோவில் ஆகும். இந்தக் கோவில் தென்னிந்தியாவில் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் என்ற இடத்தின் அருகிலுள்ளது. இக்கோவில் சபரிமலை அய்யப்பன் கோவிலைப் போலவே மிகவும் பெயர் பெற்ற கோவிலாகும்.
இந்த இடத்தில் பகவதி வழிபாடு மிகவும் பிரபலமானதாகும், மேலும் அன்னை பகவதியை இறைவன் திருமாலுடன் சேர்த்து "அம்மே நாராயணா" என இந்தக் கோவிலில் பக்தர்கள் வழிபடுகின்றனர் அதாவது நாராயணியும் நானே நாராயணனும் நானே எனப்பொருள், மேலும் அன்னை பகவதி ஒவ்வொரு நாளன்றும் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள்: காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; மாலையில் சௌபாக்கியம் தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்; இரவில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல வண்ண உடையிலும், நண்பகல் உச்சபூஜையிலும் இரவு உச்சபூஜையிலும் மகாகாளியாக காட்சி தந்து பக்தர்களை உய்வித்து அருள்பாலித்து வருகிறாள்.[1]
Remove ads
பரிகாரங்களும் நேர்த்திக் கடன்களும்

பக்தர்கள் மனம் சார்ந்த கோளாறுகள் கொண்ட தமது உறவினர்கள் மற்றும் சார்ந்தோரை, அன்னை பகவதியின் அருளால், குணப்படுத்தும் நோக்குடன் இங்கு வருகை தந்து அன்னையை வழிபடுகின்றனர்.
விழாக்கள்

சோட்டாணிக்கரை கோயிலின் 'கீழ்க்காவில்' நடைபெறும் பூசைகளில் ஒன்றான 'குருதி பூசை'யில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, அன்னை பகவதியின் அருளைப் பெறுகின்றனர். இந்தப் பூசை மாலை வேளைகளில் அன்னையின் அருளைப் பெறுவதற்காக நடத்தப்படுகிறது.
முன்பெல்லாம் 'குருதி பூசை' வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போதெல்லாம், இந்தப் பூசை ஒவ்வொரு நாளும் இரவு 8மணி முதல் 9மணிக்குள் நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் இந்தக்கோவிலில் நடைபெறும் மிகவும் முக்கியமான விழா மகம்தொழல் என்ற பெயரில் மாசிமகம் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் நவராத்திரி விழா, சித்திரைவிசு, போன்ற திருவிழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
Remove ads
அருகில் உள்ள கோயில்கள்

சோற்றானிக்கரை கோவிலுக்கு செல்லும் வழியில் த்ரிப்புணித்துறா என்ற இடத்தில் பூர்ணத்ரயீசர் கோவிலும் குடிகொண்டுள்ளது.
சோற்றானிக்கரை பகவதி கோவிலில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் த்ரிப்புணித்துறாவில் உள்ள பூர்ணத்ரயீசர் கோவில் குடிகொண்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள்
வானூர்தி நிலையங்கள்
சர்வதேச விமான தளம் எர்ணாகுளம், கொச்சியில் இருந்து ஆலுவாவில் உள்ள நெடும்பச்சேரியில், சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தொடருந்து
சோற்றானிக்கரைக்கு மிகவும் அருகிலுள்ள எர்ணாகுளத்தில் பயணிகள் இறங்கவேண்டும், எர்ணாகுளம் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கொச்சியில் இரு இரயில் நிலையங்கள் உள்ளன, அவை எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் எர்ணாகுளம் நகரம் ஆகும். வடக்கு மற்றும் தென்னிந்தியாவில் இருந்துவரும் இரயில்கள் எர்ணாகுளம் சந்திப்பில் நிற்கும். எர்ணாகுளம் டவுன், வடக்கு பாலம் அருகில்.
பேருந்து
கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் சென்றால் பேருந்து நிலையம், எர்ணாகுளம் சந்திப்பின் ரயில்வே நிலையத்தின் அருகில் உள்ளது. அந்நிறுவனம் கேரள மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கும் விரைவு மற்றும் மிக விரைவு பேருந்துகளை இயக்கி வருகிறது மேலும் அருகாமையில் உள்ள மாநிலங்களுக்கும் பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன. அதே போன்று இதர மாநிலங்கள் வழங்கும் பேருந்து சேவைகளும் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் தனியார் துறையும் எர்ணாகுளத்தில் இருந்து பல நகரங்களுக்கு செல்வதற்கான பேருந்து சேவைகளை நல்கி வருகின்றது. அவை ஹை கோர்ட் ஜங்ஷன், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் காலூர் ஜங்ஷன் போன்ற இடங்களிலிருந்து இயக்கப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads