சௌக்கிட் நிலையம்
கோலாலம்பூர், சௌக்கிட் மோனோரெயில் நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌக்கிட் நிலையம் அல்லது சௌக்கிட் மோனோரெயில் நிலையம் (ஆங்கிலம்: Chow Kit Station; மலாய்: Stesen Monorel Chow Kit; சீனம்: 周杰站) என்பது மலேசியா, கோலாலம்பூர், சௌக்கிட், பகாங் சாலை, ஈப்போ சாலை, துவாங்கு அப்துல் ரகுமான் சாலை ஆகிய சாலைகளில் கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும்.
இந்த நிலையம் பகாங் சாலை; மற்றும் ஈப்போ சாலை ஆகியவற்றின் தெற்கு முனைகளில் அமைந்துள்ளது. அத்துடன் துவாங்கு அப்துல் ரகுமான் சாலையின் வடக்கு முனை சந்திப்புப் புள்ளியின் மேல் அமைந்துள்ள இந்த நிலையத்திற்கு சௌக்கிட் எனும் புறநகர்ப் பகுதியின் பெயர் வழங்கப்பட்டு உள்ளது. துவாங்கு அப்துல் ரகுமான் சாலையின் கீழே செல்லும் இந்த மோனோரயில் பாதை சுல்தான் இசுமாயில் சாலை வரை சென்று, பின்னர் கிழக்கு நோக்கித் திரும்புகிறது.
Remove ads
பொது
இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[2] இந்த நிலையத்தின் அமைவிடம் காரணமாக, பொதுவாக நெரிசல் நேரங்களில்; பொது விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள்; மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் இந்த நிலையம் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் பயணிகள் பலர் சௌக்கிட் மையப் பகுதியை அடைய இந்த நிலையத்தைப்ப் பயன்படுத்துகிறார்கள்.
மேலும் இந்த நிலையம் பல அங்காடிக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளது.
Remove ads
சௌக்கிட்
சௌக்கிட் (Chow Kit) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள துணை மாவட்டம் ஆகும். இது சௌக்கிட் சாலையில் உள்ளது. சௌக்கிட் சாலையின் இரு புறமும் ராஜா லாவுட் சாலை, துவாங்கு அப்துல் ரகுமான் சாலை என இரு சாலைகள் இணையாகச் செல்கின்றன.
முன்பு காலத்தில் சௌக்கிட் பகுதியில் லோக் சௌக்கிட் (Loke Chow Kit) எனும் ஈயத் தொழில் செல்வந்தர் இருந்தார். அவர் அப்போதைய பிரித்தானிய மலாயா அரசாங்கத்தில் நகராட்சி மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். அவர் பல தார்மீகப் பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு உதவிகள் செய்தார். அவரின் நினைவாக அப்பகுதிக்கு சௌக்கிட் என்று பெயர் வைக்கப்பட்டது.
Remove ads
அருகாமை நிலயங்கள்
அருகாமையில் உள்ள நிலையங்கள்:[3]
நிலைய தள அமைப்பு
| L2 | தள நிலை | பக்க மேடை |
| தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில் → MR11 கோலாலம்பூர் சென்ட்ரல் (மேடான் துவாங்கு) (→) | ||
| தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில் → MR1 தித்திவங்சா நிலையம் (←) | ||
| பக்க மேடை | ||
| L1 | இணைப்புவழி | கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, இணைப்புவழி, கட்டணமில்லாத பகுதி, நகரும் பாதை ⇌ தெரு நிலை. நுழைவாயில் B |
| G | தெரு நிலை | துவாங்கு அப்துல் ரகுமான் சாலை; கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A & C |
இந்த நிலையத்தில் 2 வெளியேறும் வழிகள் உள்ளன. ஒரு வழி துவாங்கு அப்துல் ரகுமான் சாலையின் வடக்கு முனையின் மேற்குப் பக்கத்தில் உள்ளது; மற்றொன்று ராஜா மூடா சாலைக்கு கிழக்குத் திருப்பத்தில் உள்ளது.
Remove ads
காட்சியகம்
சௌக்கிட் நிலையக் காட்சிப் படங்கள் (2023):
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

