ஜெசிகா ஜோன்சு (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெசிகா ஜோன்சு (ஆங்கிலம்: Jessica Jones) என்பது நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்காக 'மெலிசா ரோசன்பெர்க்'[1] என்பவர் உருவாக்கிய, அமெரிக்க நாட்டு துப்பறிவு குற்றப்புனைவு உளவியல் திரில்லர் கதைக்கள பின்னணியை கொண்ட மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[2] இது இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஏபிசி ஸ்டுடியோஸ், டால் கேர்ள்சு புரொடக்சன்சு மற்றும் மார்வெல் தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.[3]
இந்த தொடரில் நடிகை கிறிஸ்டன் ரிட்டர்[4][5] என்பவர் துப்பறிவு நிபுனராகவும், முன்னாள் மீநாயகனாகவும் ஜெசிகா ஜோன்சு என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மைக் கோல்டர், ரேச்சல் டெய்லர், வில் டிராவல், எரின் மோரியார்டி, ஏகா டார்வில்லே, கேரி-ஆன் மோஸ், டேவிட் டென்னன்ட், ஜே. ஆர். ரமிரெஸ், டெர்ரி சென், லியா கிப்சன், ஜேனட் மெக்டீர், பெஞ்சமின் வாக்கர், சரிதா சௌத்ரி, ஜெர்மி பாப் மற்றும் டிஃப்பனி மேக் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
இந்தத் தொடரின் ஒரு பதிப்பு முதலில் 2010 இல் ஏபிசி என்ற தொலைக்காட்சிக்காக ரோசன்பெர்க்கால் என்பவரால் உருவாக்கப்பட்டது,[6][7] ஆனால் அதன் ஒளிபரப்பு இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, 2013 இன் பிற்பகுதியில் நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்க்காக சில பல மறு பதிப்புகள் செய்து ரோசன்பெர்க் என்பவரால் மீண்டும் தொடர் உருவாக்கப்பட்டது. பின்னர் ஜெசிகா ஜோன்சு என்ற கதாபாத்திரத்திற்க்காக நடிகை கிறிஸ்டன் ரிட்டர் என்பவர் டிசம்பர் 2014 இல் நடித்தார். இந்த தொடர் நியூயார்க் நகரத்தில் படமாக்கப்பட்டது.[8]
இந்த தொடரின் முதல் பருவத்தின் அனைத்து அத்தியாயங்களும் நவம்பர் 20, 2015 அன்று வெளியாகி, விமர்சகர்கள் இடையே ரிட்டர் மற்றும் டெனன்ட்டின் நடிப்பு மற்றும் தொடரின் நாய்ர் டோன், பாலுறவுக்கான அணுகுமுறை மற்றும் கற்பழிப்பு, தாக்குதல் போன்ற சித்தரிப்புகள் போன்றவற்றிக்கு பாராட்டைப் பெற்றனர். சனவரி 2016 இல் நெற்ஃபிளிக்சு இந்த தொடரின் இரண்டாவது சீபருவத்திற்காக ஜெசிகா ஜோன்சுவின் கதாபாத்திரத்தை மேலும் புதுப்பித்தது, படப்பிடிப்பு ஏப்ரல் 2017 இல் தொடங்கி செப்டம்பர் 2017 இல் முடிவடைந்தது. இரண்டாவது வருவம் மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்டது, மேலும் மூன்றாவது பருவம் ஏப்ரல் 12, 2018 அன்று தயாரிக்கப்பட்டு, ஜூன் 14, 2019 அன்று வெளியிடப்பட்டது. பிப்ரவரி 18, 2019 அன்று நெற்ஃபிளிக்சு தொடரை ரத்து செய்து, மூன்றாவது பருவம் கடைசி பருவமானது.
Remove ads
கதை
- பருவம் 1
- ஜெசிகா ஜோன்சு ஒரு மீநாயகன் பெண் ஆவார், வில்லன் கில்கிரேவ் ஒருவரைக் கொல்லும் வரை ஒரு சிறிய மீநாயகன் வாழ்க்கையைக் கொண்டிருந்தார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் ஒரு தனியார் புலனாய்வாளராக மாறி, கொலையாளி கில்கிரேவை தடுத்து நிறுத்த போராடுகிறார்.
- பருவம் 2
- இரண்டாவது பருவத்தில், கார்ல் மாலஸ் செய்த சோதனைகள் காரணமாக, ஜெசிகா ஜோன்சு தனது தாயார் இன்னும் உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
- பருவம் 3
- மூன்றாவது பருவத்தில், ஜெசிகா ஜோன்சு என்பவர் கிரிகோரி சாலிங்கர் என்ற எதிரியை எதிர்கொள்கிறார், அவர் ஒரு மோசடியாளர் என்பதை நிரூபிக்க முயற்சி செய்கிறார்.
Remove ads
தொடரின் பருவங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads