டேர்டெவில் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டேர்டெவில் (ஆங்கிலம்: Daredevil)[3] என்பது அமெரிக்க நாட்டு அதிரடி குற்றப்புனைவு மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் நெற்ஃபிளிக்சு[4][5][6] என்ற ஓடிடி தளத்திற்காக 'ட்ரூ கோடார்ட்' என்பவரால், இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.[7]

விரைவான உண்மைகள் டேர்டெவில், வகை ...

இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில்[8] அமைக்கப்பட்டுள்ளது, இதன் உரிமைகள் பிற மற்ற தொலைக்காட்சித் தொடர்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தத் தொடரை ஏபிசி ஸ்டுடியோஸ் மற்றும் மார்வெல் தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த தொடரில் நடிகர் சார்லி சாக்ஸ்[9] என்பவர் மாட் முர்டாக் மற்றும் டேர்டெவில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இவர் ஒரு பார்வையற்ற வழக்கறிஞராகவும், இரவில் முகமூடி அணிந்த கண்காணிப்பாளராக குற்றத்தை எதிர்த்துப் போராடுகிறார். இவருடன் இணைந்து டெபோரா ஆன் வோல், எல்டன் ஹென்சன்,[10] டோபி லியோனார்ட் மூர், வோண்டி கர்டிஸ்-ஹால், பாப் குன்டன், ரொசாரியோ டாசன்,[11] வின்சென்ட் டி'ஓனோஃப்ரியோ,[12] ஜோன் பெர்ந்தல், எலோடி யுங், ஸ்டீபன் ரைடர், ஜோன் வேலி, ஜெய் அலி மற்றும் வில்சன் பெத்தேல் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இதன் முதல் பருவத்தின் அனைத்து அத்தியாயங்களும் ஏப்ரல் 10, 2015 அன்று நெற்ஃபிளிக்சு இல் வெளியானது. அதை தொடர்ந்து இரண்டாவது பருவம் முழுவதுமாக மார்ச் 18, 2016 அன்று வெளியாகி, அவை நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. பின்னர் ஜூலை 2016 இல், இந்தத் தொடரின் மூன்றாவது பருவம் பற்றிய செய்திகள் வெளியாகி, அக்டோபர் 19, 2018 அன்று புதுப்பித்த கதைக்களத்துடன் வெளியிடப்பட்டது.

Remove ads

தொடரின் பருவங்கள்

மேலதிகத் தகவல்கள் பருவங்கள், ஒளிபரப்பு ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads