ஜேம்ஸ் நீஷம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜிம்மி நீஷம் (Jimmy Neesham) என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் டக்ளஸ் ஷீஹான் நீஷம் (பிறப்பு: செப்டம்பர் 17, 1990) நியூசிலாந்து பன்னாட்டுத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக அனைத்து வகையான துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடுகிறார். ஆக்லாந்தில் பிறந்த இவர் வெலிங்டன் துடுப்பாட்ட அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடுகிறார் .

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

பன்னாட்டுப் போட்டிகள்

இந்தியாவுக்கு எதிராக நீஷம் தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடி ஆட்டமிழக்காமல் 137 ஓட்டங்கள் எடுத்தார், இது அறிமுகப் போட்டியில் 8வதாக களமிறங்கிய தேர்வு மட்டையாளர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.[1] ஜூன் 2014 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது இரண்டாவது தேர்வுப் போட்டியில் நூறு அடித்ததன் மூலம் தனது முதல் இரண்டு போட்டிகளில் நூறு அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[2]

3 ஜனவரி 2019 அன்று, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நீஷம் ஒரு ஓவரில் ஐந்து ஆறுகள் உட்பட 34 ஓட்டங்கள் எடுத்தார்.[3] இது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மட்டையாளர் ஒருவர் ஒரு நிறைவில் எடுத்த அதிக ஓட்டங்களாகும்.[4]

ஏப்ரல் 2019 இல், இவர் 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றார்.[5][6] 1 ஜூன் 2019 அன்று, உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் முதல் போட்டியில், நீஷம் தனது 50 வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[7] ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்தின் போட்டியில், நீஷம் தனது ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தியதுடன் 50வது முறையாக மட்டையாளரை வீழ்த்தினார்.[8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads