ஜோகுலம்பா கட்வால் மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோகுலம்பா கட்வால் மாவட்டம் (Jogulamba Gadwal district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கட்வால் நகரம் ஆகும்.[3]


மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, சோகுலம்பா மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது.
Remove ads
மக்கள் தொகையியல்
2,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது சோகுலம்பா மாவட்டம். [4]சோகுலம்பா மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–33 ஆகும். [5] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சோகுலம்பா மாவட்ட மக்கள் தொகை 6,64,971 ஆகும்.[4]
மாவட்ட நிர்வாகம்
சோகுலம்பா மாவட்டம், கட்வால் என்ற ஒரு வருவாய் கோட்டத்தையும், 12 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது. [3] புதிதாக நிறுவப்பட்ட சோகுலம்பா மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக ரசத் குமார் சைனி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.[6]
வருவாய் வட்டங்கள்
சோகுலம்பா மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களின் விவரம்:[7]
- கட்வால்
- தரூர்
- காட்டூ
- இதிக்யாலா
- உண்டவெல்லி*
- மணப்பபாடு
- லீச்சா
- ஆலம்பூர்
- வட்டேப்பள்ளி
- ரசொலி*
- கல்லூர் திம்மனன்தோட்டி*
- மல்டக்கல்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads