ஜோலார்பேட்டை

தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

ஜோலார்பேட்டைmap
Remove ads

ஜோலார்பேட்டை (ஆங்கிலம்:Jolarpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்

இதனருகில் ஏலகிரி மலை உள்ளது. இது திருப்பத்தூருக்கு 9 கி.மீ. தொலைவிலும், வேலூருக்கு தென்கிழக்கே 85 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்நகரம் ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

ஜோலார்பேட்டை தொடருந்து நிலையம், சென்னை, சேலம், பெங்களூர், மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூர் போன்ற நகரங்களை இணைக்கும் தென்னக இரயில்வேயின் முக்கிய சந்திப்பாகும். [3]

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,140 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 29,662 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 83.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3148 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,308 மற்றும் 531 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.87% , இசுலாமியர்கள் 4.44%, கிறித்தவர்கள் 3.55%, தமிழ்ச் சமணர்கள் 0.0%., மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads