டெர்பியம்(III) நைட்ரேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டெர்பியம்(III) நைட்ரேட்டு (Terbium(III) nitrate) என்பது Tb(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] டெர்பியம் தனிமமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. டெர்பியம்(III) நைட்ரேட்டு அறுநீரேற்று ( [Tb(NO3)3(H2O)4]·2H2O) முச்சரிவச்சு படிகக் கட்டமைப்பில் நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. பச்சை நிற உமிழ்வுகள் கொண்ட பொருட்கள் தயாரிப்பில் டெர்பியம்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது.[2]
Remove ads
தயாரிப்பு
டெர்பியம்(III,IV) ஆக்சைடை நீர்த்த நைட்ரிக் அமிலம் மற்றும் ஐதரசன் பெராக்சைடு சேர்ந்த கரைசலில் கரைத்தால் டெர்பியம்(III) நைட்ரேட்டு உருவாகும்.[3]
டெர்பியம்(III) நைட்ரேட்டை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து படிகமாக்கி 45~55% கந்தக அமிலம் சேர்த்து உலர்த்துவதன் மூலம் அறுநீரேற்றைப் பெறலாம்.[4]
பண்புகள்
அம்மோனியம் பைகார்பனேட்டுடன் டெர்பியம்(III) நைட்ரேட்டு சேர்த்து வினையில் ஈடுபடுத்தினால் Tb2(CO3)3 உருவாகும்.[5] மேலும், மெத்தில் ஐசோசயனைடுடன் அதிக அளவிலான நைட்ரேட்டு அயனிகளுடன் சேர்ந்து Tb(NO3)2−5 சேர்மம் உருவாகிறது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads