டெலியோர்னிசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டெலியோர்னிசு (Deleornis) என்பது ஆப்பிரிக்கத் தேன்சிட்டு ஆகும். இது பறவைகளின் நெக்டாரினிடே குடுபம்பத்தினை சார்ந்த ஒரு பேரினமாகும்.[1] இதன் சிற்றினங்கள் சில நேரங்களில் ஆந்த்ரெப்ட்சுகளில் சேர்க்கப்படுகின்றனர். இப்பேரினத்தின் கீழ் உள்ளச் சிற்றினங்கள்.
- பிரேசரின் தேன்சிட்டு, டெலியோர்னிசு பரேசெரி
- சாம்பல் தலை தேன்சிட்டு, டெலியோர்னிசு ஆக்சில்லரிசு
சாம்பல் தலை தேன்சிட்டு சில நேரங்களில் பரேசெரின் தேன்சிட்டின் துணையினமாகக் கருதப்படுகிறது.
தேன்சிட்டுக்கள் மிகச் சிறிய பழைய உலகப் பசாரென் பறவைகளின் ஒரு குழுவாகும். இவை பெரும்பாலும் மலர்த்தேனை உண்கின்றன. இருப்பினும் குஞ்சுகள் பூச்சிகளை உணவாக உண்ணும். சிறிய இறக்கைகளை வேகமாக அசைத்துப் பறக்கின்றன. பெரும்பாலான இனங்கள் ஓசனிச்சிட்டைப் போல வட்டமிடுவதன் மூலம் மலர்த்தேனை எடுத்துக் கொள்ளும். ஆனால் பொதுவாக பெரும்பாலான நேரங்களில் மலரில் அமர்ந்து உணவை எடுக்கின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads