டொமினிக்கன் குடியரசு

From Wikipedia, the free encyclopedia

டொமினிக்கன் குடியரசு
Remove ads

டொமினிக்க குடியரசு (Dominican Republic, ஸ்பானிய மொழி: República Dominicana, re'puβlika domini'kana) என்பது கரிபியன் தீவான ஹிஸ்பனியோலாவில் (Hispaniola) அமைந்துள்ள ஒரு இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது ஹையிட்டி உடன் ஹிஸ்பனியோலா தீவைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஹிஸ்பனியோலா என்பது பாரிய அண்டிலெஸ் தீவுகளில் உள்ள இரண்டாவது பெரியதும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மேற்கேயும் கியூபாவுக்கும் ஜமேய்க்காவுக்கும் கிழக்கேயும் அமைந்துள்ளதுமான ஒரு தீவாகும்.[2]

விரைவான உண்மைகள் டொமினிக்கன் குடியரசுDominican RepublicRepública Dominicana, தலைநகரம் ...
Thumb
டொமினிக்கன் குடியரசின் 1 பெசோ நாணயம்
Thumb
டொமினிக்கன் குடியரசின் 100 பெசோ பணத்தாள்
Remove ads

புவியியல்

டொமினிக்கன் குடியரசானது, கரீபியன் கடலில் ஹிஸ்பானியோலா என்னும் தீவில் மூன்றில் இரண்டு பகுதி பரப்பளவு நிலத்தைக்கொண்டுள்ளது.டொமினிக்கன் குடியரசின் மேற்கில் கெய்டியும் கிழக்கில் ஹிஸ்பானியோலா தீவின் பியூடோரிக்காவும் மேற்கில் ஜமைக்காவும் எல்லைகளாக அமைந்தள்ளன.நாட்டின் மத்தியிலும் மேற்கிலும் மலைகள் நிறைந்துள்ளதோடு, தென்மேற்கே தாழ்நிலங்கள் அமைந்துள்ளன. என்ரிகியிலோ ஏரி , இந்நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும்.யாக் டெல் நோர்ட் எனும் நதி இந்நாட்டின் மிகப்பெரிய நதியாகும்.இது தவிர ஏராளமான சிறிய ஆறுகளும் ஓடைகளும் இங்கு பாய்கின்றன.

  • மொத்தப்பரப்பு:18,815 ச.மைல் (48,730 ச.கி.மீ.)
  • நிலப்பரப்பு:18,680 ச.மைல் (48,381 ச.கி.மீ.)
  • தலைநகரமும் பெரிய நகரமும்(2003):செண்டோ டொமிங்கோ
  • ஏனைய பெரிய நகரங்கள்:சந்தியாகோ,டிலோஸ் கபரேலோஸ்
  • உயர் மலைச்சிகரம்:டுவார்ட் சிகரம் (3,098 மீற்றர்)
  • தாழ்மையம்:என்ரிகியிலோ ஏரி
  • மக்கள் தொகை(2010):9,794,487
  • நாணயம்:டொமினிக்கன் பெசோ
  • மொழிகள்:ஸ்பானிய மொழி
  • இனக்குழுவினர்:வெள்ளையர் 16%,கறுப்பின மக்கள் 11%,கலப்பின மக்கள் 73%
  • சமயம்:ரோமன் கத்தோலிக்கம்
  • எழுத்தறிவு(2003):85%
  • இணையத்தளக் குறியீடு:.do
  • தொலைபேசிக் குறியீட்டு இலக்கம்:+1-809,+1-829,+1-849
Remove ads

வரலாறு

1492 ஆம் ஆண்டு இந்நாட்டை கொலம்பஸ் கண்டு பிடித்தார்.அவர் அதற்கு "லா எஸ்பனோல"எனப் பெயரிட்டதோடு,கொலம்பஸின் மகனாகிய டியாகோ முதலாவது ராஜ பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.தலைநகராகிய செண்டோ டொமிங்கோ,1496 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது.இதுவே மேற்குலகில் ஐரோப்பியர் குடியேறிய மிகப்பழமையான நகரமாகும்.

தொடர்ந்து ஸ்பானியரின் குடியேற்ற நாடாகிய டொமினிக்கா குடியரசு,1795 இல் பிரான்சியரின் ஆதிக்கத்தின் பின் வந்தது.1801 இல் கெய்ட்டி நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.1808 இல் செண்டோ டொமிங்கோ பொது மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குடியரசுக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது.ஆனால், 1814–1821 வரை ஸ்பானியர்கள் மீண்டும் தமது காலனித்துவத்தை இங்கு நிலை நாட்டினர்.1822-1844 வரை,கேய்ட்டின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு, 1844 ஆம் ஆண்டு மாசி 27 ஆம் திகதி பீட்ரோ சந்தானா தலைமையில் டொமினிக்கன் குடியரசு உதயமானது.எனினும்,1861 முதல் 1865 வரை மீண்டும் ஸ்பானியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.1865 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் திகதி ஸ்பெய்னிடம் இருந்து முற்றாக விடுதலை பெற்று டொமினிக்கன் குடியரசு சுதந்திர அரசாகத் திகழ்ந்தது.எனினும்,ஐக்கிய அமெரிக்காவின் தலையீடு அதிகமாகவே காணப்பட்டது.1930 இல் இராணுவம் மேற்கொண்ட புரட்சியின் பலனாக ,இராணுவ ஆட்சி நிலவி, பின்னர் தேர்தல் நடாத்தப்பட்டு ஜனநாயக்க ஆட்சி மலர்ந்தது.

Remove ads

கலாச்சாரம்

டொமினிக்கன் குடியரசு மக்கள் ஸ்பானிய - கரீபியன் கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர்.ஸ்பானிய காலனித்துவ, ஆபிரிக்க அடிமைகள் மற்றும் டேய்னோ பூர்வீகம் ஆகியவற்றின் கலாச்சாரத் தாக்கங்கள் நாடெங்கிலும் முழுமையாகப் பரவிக்கிடக்கின்றன.

காலநிலை

டொமினிக்கன் குடியரசானது வெப்பக் காலநிலையைக் கொண்ட ஓர் நாடாகும்.வருடத்தில் தையும் மாசியும் மிகவும் குளிர்ச்சியான மாதங்களாகும்.ஆனால், ஆவணி மாதம் மிகவும் வெப்பமாக மாதமாகும்.ஆவணி,புரட்டாதி மற்றும் ஐப்பசி மாதங்களில் புயல் காற்று நாட்டைத்தாக்குவதோடு, தென் பிராந்திய கரையோரங்களில் பாரிய சேதங்களை விளைவிக்கும்.

தொடர்பாடல்

  • தொலைபேசிகள் (2007): பிரதான தொலைபேசிப் பாவனையாளர்கள் 897,000;செல்லிடத்தொலைபேசி பாவனையாளர்கள் 4,606 மில்லியன்
  • வானொலி ஒலிபரப்பு நிலையங்கள்: AM 120, FM 56, SW 4
  • தொலைக்காட்சி ஒளிபரப்பு பரப்பு நிலையங்கள(1997): 25

பிரசித்தி பெற்ற இடங்கள்

  • சமானா விரிகுடா
  • கொலம்பஸ் அல்கார்
  • கொலோனியல் சோன்
  • ஒசாமா கோட்டை
  • கொலம்பஸ் பூங்கா
  • எல் செல்டோ லிமன் நீர் வீழ்ச்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads