சக்காரா

எகிப்தின் பண்டைய தொல்லியல் நகரம் From Wikipedia, the free encyclopedia

சக்காராmap
Remove ads

சக்காரா (Saqqara) (அரபி: سقارة, Egyptian Arabic pronunciation: [sɑʔˈʔɑːɾɑ]), மெம்பிசை தலைநகராகக் கொண்ட பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைகள் கொண்ட தொல்லியல் நகரம் ஆகும். இப்பண்டைய நகரம் கீழ் எகிப்தில் உள்ளது.[2][3] இப்பண்டைய சக்காரா நகரத்தில், பழைய எகிப்து இராச்சியததை ஆண்ட ஜோசெர் மன்னரின் பிரமிடு, உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது. சக்கரா நகரத்தின் ஜோசர் பிரமிடு செவ்வக வடிவில் படிக்கட்டுகள் மற்றும், மேசை போன்ற அமைப்புகளுடன் கூடியது.

விரைவான உண்மைகள் சக்காரா سقارة, இருப்பிடம் ...

சக்காரா நகரம், எகிப்தின் தேசியத் தலைநகரமான கெய்ரோ பெருநகரத்திற்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சக்கார நகரத்தின் பரப்பளவு 7 கீழ் 1.5 km (4.35 கீழ் 0.93 mi) ஆகும்.

எகிப்தின் துவக்க கால அரச மரபுகளில் ஒன்றான எகிப்தின் மூன்றாம் வம்ச மன்னர்களால் சக்காரா நகரத்தில் பார்வோன்கள் மற்றும் அரச குடும்பத்தினர்களின் கல்லறைப் பிரமிடுகள் கட்டப்பட்டது. சக்கரா நகரத்தின் வடக்கில் அபுசர் பகுதியும், தெற்கில் தச்சூர் தொல்லியல் நகரம் உள்ளது.

மெம்பிசின் நகரத்தின் கிசாவின் பெரிய பிரமிடு வளாகம் முதல் முதல் சக்காரா நகரம் முதல் தச்சூர் நகரம் வரையிலான கல்லறை வளாகங்களை யுனெஸ்கொ நிறுவனம், 1979-இல் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.[4] சக்காரா என்ற பெயர், பெர்பெர் இன பழங்குடி மக்களின் பெயரான பெனி சக்கார் எனும் பெயரிலிருந்து சக்காரா எனும் பெயர் தோன்றக் காரணமாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். [5]

இவ்வூரில் சக்காரா மன்னர்கள் பட்டியல் கல்வெட்டை இரண்டாம் ராமேசஸ் நிறுவினார்.

Remove ads

வரலாறு

துவக்க வம்ச காலத்தில்

Thumb
சக்காரா தொல்லியல் களத்தின் வரைபடம்
Thumb
மன்னர் ஜோசரின் கல்லறைப் பிரமிடு (நடுவில்), உனாஸ் பிரமிடு (இடது), யுசர்காப்பின் பிரமிடு (வலது)

எகிப்தின் துவக்க கால அரச மரபின் இரண்டாம் வம்ச அரச குடும்பத்தினரின் கல்லறைகள், பிரமிடு வடிவில் சக்காரா நகரத்தின் வடக்கில் நிறுவப்பட்டது.

துவக்க வம்ச காலத்திய நினைவுச் சின்னங்கள்

  • மன்னர் ஹோதெப்செகெம்வின் கல்லறை
  • மன்னர் நைனெத்ஜெரின் கல்லறை
  • மன்னர் சேக்கிம்கேத்தின் புதைந்த கல்லறைப் பிரமிடு
  • ஜோசெர் பிரமிடு
Thumb
ஜோசெர் பிரமிடு கல்லறை வளாகம்

பழைய இராச்சியக் காலம்

Thumb
பழைய எகிப்திய இராச்சியத்தின், 4 அல்லது 5-ஆம் வம்ச மன்னரின் மரச்சிற்பம்,கிமு 2500

பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சம், ஐந்தாம் வம்சம் மற்றும் ஆறாம் வம்ச பார்வோன்கள் அனைவரும் சக்காரா நகரத்தைச் சுற்றிலும் தங்கள் கல்லறைகளை பிரமிடுகள் வடிவத்தில் சிறிய அளவில் நிறுவிக் கொண்டனர். சக்காரா நகரத்தில் மன்னர்களின் கல்லறைகளுக்கு அருகில் அரசவை உறுப்பினர்களின் கல்லறைகள் நிறுவப்பட்டுள்ளது.

பழைய எகிப்திய இராச்சியத்தின் நினைவுச் சின்னங்கள்

முதல் இடைநிலைக் காலத்திய நினைவுச் சின்னங்கள்

மத்திய கால இராச்சியத்தின் நினைவுச் சின்னங்கள்

எகிப்தின் மத்திய கால ஆட்சியின் தலைநகரமாக மெம்பிசு இல்லாதபடியால், சக்காராவில் மன்னர்களின் நினைவுச் சின்னங்கள் எதும் எழுப்படவில்லை. அரச குடும்பத்தவர்கள் அல்லாதவர்களின் சில நினைவுச் சின்னங்கள் சக்காரா நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்திய நினைவுச் சின்னங்கள்

புது எகிப்து இராச்சியம்

Thumb
அபீஸ் கல்லறையின் குகை போன்ற நுழைவாயில்

புது எகிப்திய இராச்சியத்தின் பதினெட்டாம் வம்ச ஆட்சிக் காலத்தில், எகிப்தின் தலைநகரமாக மீண்டும் மெம்பிசு நகரம் விளங்கியதால், இதனருகே அமைந்த சக்காரா நகரத்தில் பார்வோன்களான முதலாம் தூத்மோஸ், இரண்டாம் ராமேசஸ் மற்றும் துட்டன்காமன் போன்றோர் மீண்டும் நினைவுச் சின்னங்களை எழுப்பினர்.

Remove ads

2011 எகிப்தியப் புரட்சியின் போது பண்பாட்டுக் களங்களை கொள்ளையிடல்

2011 எகிப்தியப் புரட்சியின் போது சக்காரா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அபுசிர் மற்றும் தச்சூர் நகரங்களின் பண்டைய எகிப்திய நினைவுச் சின்னங்களை பயங்கரவாத இசுலாமியப் புரட்சியாளர்கள் அழித்தொழித்தனர்.[6][7]

அண்மைய அகழாய்வுகள்

2011-ஆம் ஆண்டின் சக்கார நகரத்தின் அகழாய்வுகளின் போது, பூனை மற்றும் நாய் விலங்களின் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டது.[8]

சூலை 2018-இல் நடைபெற்ற சக்காரா நகரத்தின் அகழாய்வுகளின் போது, தங்க முலாம் பூசப்பட்ட அழகிய இறந்த பார்வோனின் மம்மி முகமூடி கண்டெடுக்கப்பட்டது.[9] சக்காரா நகரத்தில் நவம்பர் 2018-இல் நடைபெற்ற அகழாய்வுகளில் எகிப்தின் ஐந்தாம் வம்சம் மற்றும் ஆறாம் வம்ச பார்வோன்களின் மம்மி மரண முகமூடிகள் மற்றும் பூனை மம்மிகளுடன் கூடிய ஏழு கல்லறைகள் கண்டெடுக்கப்பட்டது.[10][11][12][13][14]

சூன் 2019-இல் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல நூறு மம்மிகள் சக்காரா நகரத்தின் அகழாய்வில் கண்டெடுக்க்பட்டது.[15][16][17]

2020 செப்டம்பர் மாத துவக்கத்தில், சக்காரா நகரத்தின் 40 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 13 மம்மிகளின் ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் அதே மாதத்தில் மேலும் 14 மர ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று எகிப்திய தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.[18][19][20] நவம்பர், 2020-இல் சக்கரா நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 100 சவப்பெட்டிகளில் சிலவற்றுள் மம்மிகளும், சிலவற்றுள் 40 தங்க மூலம் பூசப்பட்ட உசாப்தி சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது.[21] இதனால் எகிப்தின் தொல் வரலாறு மாற்றியமைக்கப்படும் என தொல்லியல் வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

சனவரி, 2021-இல் சக்காரா நகரத்தில் புது எகிப்து இராச்சிய காலத்தின் 50 மர ஈமப்பேழைகள் 30-40 அடி ஆழத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த மரப் பேழைகளில் பாபிரஸ் காகித்தில் பண்டைய எகிப்திய மொழியின் படவெழுத்தில் எழுதப்பட்ட இறந்தோர் நூலின் 17-வது அத்தியாயம் கண்டெடுக்கப்பட்டது. இதனை எழுதியவரின் உசாப்தி சிற்பமும் மரப்பேழையில் இருந்தது.[22][23][24][25]

மே 2022-ஆம் ஆண்டில் சக்காரா நகரத்தின் கல்லறைகளில் பிந்தைய கால எகிப்திய இராச்சிய காலத்திய கிமு 500 ஆண்டுகளுக்கு முந்தைய வர்ணம் பூசப்பட்ட மம்மிகளுடன் கூடிய 250 மரச்சவப்பெட்டிகளும், 150 எகிப்தியக் வெண்கலக் கடவுட் சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளில் அமூன், அனுபிஸ், இசிசு, ஒசிரிசு, ஓரசு மற்றும் ஆத்தோர் கடவுள்களின் வெண்கலச் சிலைகள், வழிபாட்டிற்கு தேவையான வெண்கலப் பாத்திரங்கள் மற்றும் இசைக்கருவிகள் மற்றும் தாயத்துகள் அடக்கம். நெப்திஸ் மற்றும் இசிசு கடவுள்களின் முகம் தங்க முகமூடிகள் அணியப்பட்டிருந்தன.[26][27]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads