தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்

தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய துறை From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
Remove ads

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (Tamilnadu State Transport Corporation – TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது.[1][2][3]

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Remove ads

வரலாறு

சென்னை மாநிலத்தில் 1956 ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை உருவாக்கப்பட்டது. அதற்கு மூன்றாண்டுகளுக்குப் பிறகு 192 கிலோமீட்டர் தொலைவுள்ள வழித்தடங்களில் விரைவுப் போக்குவரத்தை அரசு துவக்கியது. 1967 சட்டமன்றத் தேர்தலில் வென்று தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு தனியார் பேருந்து தடங்களை அரசுடமையாக்குவதில் கவனம் செலுத்தியது. பேருந்து தடங்களை அரசுடமை ஆக்குவது தொடர்பாக ஆராய 1971 இல் சோமசுந்தரம் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையின்படி படிப்படியாக பேருந்து வழித்தடங்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. அதன் முதல் புள்ளியாக 1972 சனவரி முதல் நாளன்று தமிழ்நாடு அரசால் பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கபட்டது. அதன்பிறகு படிப்படியாக பிற போக்குவரத்துக் கழகங்கள் துவக்கபட்டன.[4]

Remove ads

சேவைகள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் நகர் மற்றும் புறநகர்ப் பேருந்து சேவைகளையும் இயக்குகிறது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் முழுவதும் நகர பேருந்துகளாகவும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் முழுவதும் புறநகர் சேவைகளையும் கொண்டுள்ளது. மற்ற போக்குவரத்துக் கழகங்கள் இருசேவைகளிலும் கணிசமான பேருந்துகளை இயக்குகின்றன.

நிர்வாக அமைப்பு முறை

Thumb
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சொகுசு பேருந்து
Thumb
காலாவதியான பேருந்துகளின் மேற்கூரைகள் மதுரை பணிமனை
Thumb
தொடர் பேருந்து

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை

சென்னை நகர் மற்றும் புறநகரில் நகர பேருந்துகளை மட்டும் இயக்குகிறது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்

முதன்மை கட்டுரை:அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் 300 கி.மீ. அதிகமான தூரம் கொண்ட வழிதடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகளாகவும், மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசுப் பேருந்துகளாக உள்ளன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம்

முதன்மை கட்டுரை:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம்

விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்

முதன்மை கட்டுரை:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர்

முதன்மை கட்டுரை:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை

கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை

முதன்மை கட்டுரை:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை

மதுரை, திண்டுக்கல் ,தேனி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி

முதன்மை கட்டுரை:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி

திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.

Remove ads

போக்குவரத்துக் கழகங்களின் பிரிவுகள்

மேலதிகத் தகவல்கள் போக்குவரத்துக் கழகத்தின் பழைய பெயர்(1996முன்பு), போக்குவரத்துக் கழகத்தின் தற்போதைய பெயர் ...

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் நிலையங்கள்:

Remove ads

பேருந்துகளில் வசதிகள்

மாநகர பேருந்துகளில் சொகுசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் குளிர்சாதன நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவீன சொகுசுப் பேருந்துகள் புறநகர பேருந்துகளாக சில போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படுகின்றன. அதிநவீன சொகுசுப் பேருந்துகள் விரைவுப் போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படுகின்றன.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads