தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University—TNJFU) என்பது தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் ஆகும்.[2] இப்பல்கலைக்கழகம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் அழைக்கப்படுகிறது.
Remove ads
படிப்புகள்
இப்பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளது. மாணவர்கள் இப்பல்கலைகழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.
- நான்காண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (பி. எப். எஸ்சி - B.F.Sc) .
- எட்டு படிப்புகளில் இரண்டாண்டு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம் (எம். எப். எஸ்சி - M.F.Sc)
- நான்கு படிப்புகளில், மூன்றாண்டு முனைவர் பட்டப்படிப்பு[3]
Remove ads
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள்
பிற மையங்கள்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பிற இரண்டு மையங்கள் சென்னையில் அமைந்துள்ளது.
- பணியாளர் பயிற்சி நிறுவனம், சென்னை
- மீன்வள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம், (FITT) சென்னை http://www.tnfu.org.in/university/wp/?page_id=3683
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads