பொன்னேரி

From Wikipedia, the free encyclopedia

பொன்னேரிmap
Remove ads

பொன்னேரி (Ponneri) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும். பொன்னேரி நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்
Remove ads

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்

பொன்னேரிப் பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று பொன்னேரி நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.[4][5] பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.

அமைவிடம்

இந்நகராட்சியானது மாவட்ட தலைமையிடமான திருவள்ளுாிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் சென்னையிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் பழவேற்காடு 19 கி.மீ.; மேற்கில் செங்குன்றம் 22 கி.மீ.; வடக்கில் கும்மிடிப்பூண்டி 18 கி.மீ.; தெற்கில் மீஞ்சூர் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

15 ச.கி.மீ. பரப்பும் 27 நகர் மன்ற உறுப்பினர்களையும் 265 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 இந்நகராட்சி 7,842 வீடுகளும்,42,189 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் எழுத்தறிவு 86.41% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13.32°N 80.2°E / 13.32; 80.2 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது.

கல்வி நிலையங்கள்

  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
  • உலகநாதன் நாராயணசாமி கலை & அறிவியல் கல்லூரி
  • தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
  • ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி
  • ஈடன் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • சரசுவதி கல்வியியல் கல்லூரி
  • புனித யோவான் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி
  • வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • வேலம்மாள் CBSC பள்ளி
  • பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • சிரீதேவி கலை & அறிவியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன.
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads