தலைஞாயிறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தலைஞாயிறு (ஆங்கிலம்:Thalainayar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் காவிரி கடைமடை பகுதியில் 49.05.சதுர கி.மீ பரப்பளவில் 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும்.[3]தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தலைஞாயிறு ஊரில் இயங்குகிறது.
Remove ads
அமைவிடம்
தலைஞாயிறு பேரூராட்சி, நாகப்பட்டினத்திலிருந்து 44 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் திருத்துறைப்பூண்டி 18 கி.மீ.; வேதாரண்யம் 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
49.05 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 110 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
புவியியல் & தட்பவெப்பம்
காவிரி ஆற்றின் கடைமடை பகுதியில் அமைந்த தலைஞாயிறு பேரூராட்சியி, வங்காள விரிகுடா 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இயல்பான வறட்சி மற்றும் குளிர் நிலவும் இப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் பரவலாக அதிக மழை பெய்வதுண்டு. ஆண்டு சராசரி மழையளவு 1100.00 மி.மீ ஆக உள்ளது. நெல் விளைவித்தல் முக்கியத் தொழிலாகவும், உள்ளூர் மீன் பிடி தொழில் மற்றும் இறால் வளர்த்தல் பிற தொழில்களாகவும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 3,443 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட தலைஞாயிறு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 12,798 ஆகும். அதில் 6,269 ஆண்கள் ஆகவும், பெண்கள் 6,529 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 1248 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1041 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 84.15 % ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.55% ஆகவும், இசுலாமியர் 5.89% ஆகவும், கிறித்தவர்கள் 0.48% ஆகவும், பிறர் 0.09% ஆகவும் உள்ளனர்.[5][6]
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads