தமிழ்நாடு நாள்
தமிழ்நாடு மாநிலம் உருவான நாள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு நாள் (Tamilnadu Day) என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. கலவரங்களும் ஏற்பட்டன. இதனால் இந்திய ஒன்றிய அரசு வேறு வழியின்றி 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. இதன்படி, சென்னை மாநிலத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் நிறுவப்பட்டன. சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது. சென்னை மாநிலத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு 25 அக்டோபர் 2019 அன்று வெளியிட்டது.[1][2] இந்நிலையில் 2021 இல் புதியதாக பொறுபேற்ற மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, சூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்தது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தமிழ்நாடு நாள் நவ.01 என்று வருட வருடம் சிறப்பாக பெருந்திரளான மக்களை கூட்டி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.[3]
Remove ads
பின்னணி
மொழிவழியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களில் மாநிலம் உருவான நாளை அந்தந்த மாநிலங்கள் அரசு விழாவாகவும், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்து கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் அப்படியான விழாவானது அரசு சார்பில் கொண்டாடப்படாமலும், மாநிலத்தின் பழைய பெயரான சென்னை மாநிலம் என்ற பெயரும் தொடர்ந்து வந்தது.
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடக் கோரி தனி நபராக சங்கரலிங்கனார் எனும் முதியவர் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு இறந்தார். சென்னை மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்றபிறகு 18 சூலை 1968-இல் சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு எனப்பெயர் மாற்ற சென்னை மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு 1969 சனவரி 14 தைப் பொங்கலன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.
தமிழ்நாடு அமைந்த நாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இதை பல தமிழ் அமைப்புகள் நவம்பர் முதல் நாளன்று விழாவாக கொண்டாடி வந்தன. குறிப்பாக நா. அருணாச்சலம் அவர்களால் உருவாக்கப்பட்ட சான்றோர் பேரவை அமைப்பால் தமிழ்நாடு மாநிலம் அமைந்த பெருவிழா என்ற பெயராலும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியால் தமிழகப் பெருவிழா என்ற பெயராலும் இந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களின்போது இந்த விழாவை தமிழ்நாடு அரசு நடத்தவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இந்த நெடுநாள் கோரிக்கையானது தமிழ்நாட்டு அரசால் ஏற்கப்பட்டு 25 அக்டோபர் 2012 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ 10 இலட்சம் ஒதுக்கப்பட்டு 2019 நவம்பர் முதல் நாளில் அரசு விழா கொண்டாடப்பட்டது.[4] இந்த தமிழ்நாட்டு நாளுக்கு மு. க. ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.[5] இந்நிலையில் 2021 இல் புதியதாக பொறுபேற்ற மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, சூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.
Remove ads
சர்ச்சைகள்
நவம்பர் முதல் நாளை மாற்றி சூலை 18 அன்று தமிழ்நாடு நாள் என அறிவித்ததற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அறிவிப்புக்கு எதிராக பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும், நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,[6] எடப்பாடி க. பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், சீமான்,[7] ச. இராமதாசு,[8] உள்ளிட்ட அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தாங்கள் வழக்கம்போல நவம்பர் முதல் நாளன்று தமிழ்நாடு விழாவைக் கொண்டாடப்போவதாக பல தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் இதன் எதிர்ப்பாளர்கள் ஒரு மாநிலம் அல்லது தாயகம் உருவான நாளைதான் (நவம்பர் முதல்நாள்) கொண்டாடுவார்கள். அந்த மாநிலத்துக்கு இன்ன பெயர் சூட்டவேண்டும் என்று பரிந்துரைத்த நாளை கொண்டாடுவது குழப்பத்தை ஏற்படுத்தும்.[9] முதலமைச்சரின் பரிந்துரைப்படி பார்த்தாலும் சனவரி 14 அன்றுதான் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றமும் நடைமுறைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.[10]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads