தமிழ்நாடு வக்பு வாரியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமயப் பணிகளுக்கும் அறப்பணிகளுக்கும் சொத்துகளைக் கொடையளிப்பதே வக்பு ஆகும்.[1] தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்படுகிறது. இஸ்லாமியரின் சமய, சமூக, பொருளாதாரப் பணிகளுக்கு வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன. கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், விருந்தினர் இல்லங்கள், பள்ளிவாசல்கள், அடக்கத் தளங்களுக்கும் வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன.
Remove ads
அமைப்பு
இந்தியா விடுதலையடைந்த பிறகு வக்பு அமைப்புகளுக்கு சட்ட ஏற்பு வழங்கப்பட்டது. மாநில அரசுகளின் மூலமாக வக்பு வாரியங்கள் செயல்படுவதற்கும் வக்பு சொத்துக்களைத் திறமையான முறையில் மேலாண்மை செய்வதற்கும், 1954-ஆம் ஆண்டு, வக்பு சட்டம் நாடளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் சில குறைபாடுகள் இருந்த காரணத்தால், 1959,1964,1969-ஆம் ஆண்டுகளில் இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 1995-இல் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, பரவலான கூறுகளை உள்ளடக்கிய புதிய சட்டம் இயற்றப்பட்டது. எனவே 1995-இல் இயற்றப்பட்ட வக்பு சட்டம் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நாடு முழுவதும் சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட வக்புக்கள் சட்ட ஏற்பு பெற்று உள்ளன. வக்பு வாரியச் சொத்துக்களை திறமையாக நிர்வாகம் செய்யும் வகையில் அறக்கட்டளை நிர்வாகிகளின் அதிகாரத்தைச் சட்டம் வரையறுக்கிறது.
மாநில அரசுகள் வக்பு வாரியங்களை அமைக்க வேண்டும் என்று வக்பு சட்டம நெறிமுறை வகுத்துள்ளது. வக்பு சொத்துகளை ஆய்வு செய்வதுடன், வக்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காண வக்பு நடுவர் மன்றங்களை ஏற்படுத்தவும், இந்தப் பணிகளுக்காக ஆய்வு ஆணையர்களை நியமிக்கவும் வேண்டும் என இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இதுவரை தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, அஸ்ஸாம், பிஹார், குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், பஞ்சாப்,மகாராஷ்டிரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், அம்மாநில அரசுகள் வக்ப் வாரியங்களை அமைத்துள்ளன. புதுச்சேரி, சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய ஒன்றிய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், அம்மாநில அரசுகள் வக்ப் வாரியங்களை அமைத்து உள்ளன. அருணாச்சல் பிரதேசம், ஜார்க்கண்ட், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் தாமன், தியு ஒன்றிய ஆட்சிப்பகுதியிலும் வக்பு வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. 1995 வக்பு சட்டத்தில் 83-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வக்பு நடுவர் மன்றங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
14 மாநிலங்களும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளும் வக்பு நெறிமுறைகளை அறிவிக்கை செய்துள்ளன. இதர ஆறு மாநிலங்கள் வெறும் நெறிமுறைகளை மட்டும் இயற்றி உள்ளன. எஞ்சியுள்ள மாநிலங்களும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளுக்கும் இதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு மாநிலத்தில் சியா பிரிவு வக்பு சொத்துக்கள் இருந்து, அவர்களுக்கு தனியே வாரியம் இல்லாத பட்சத்தில் வக்பு வாரியத்தில் சியா பிரிவை சேர்ந்த ஒருவர் இடம்பெற வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.
Remove ads
பணியமைப்பு
வாரியத்தின் நிர்வாக அலுவலர் முதன்மை செயல் அலுவலர் ஆவார். நிர்வாக மேன்மைக்காக வாரியம் தன்னகத்தே 11 சரக அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இவை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், பண்ருட்டி, சேலம், கோயமுத்தூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன. ஒவ்வொரு சரகமும் ஒரு கண்காணிப்பாளரால் நிர்வகிக்கப்படுகிறது. 31 மாவட்டங்களுக்கு 33 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேரடி நிர்வாகத்தில் உள்ள வக்புகளுக்கு நிர்வாக அலுவலராக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Remove ads
பணிகள்
- ஒவ்வொரு வக்பின் தோற்றம், வருவாய், நோக்கம், பயனாளிகள் தகவல்கள் அடங்கிய பதிவுரு பேணுதல்
- வக்பு சொத்துக்களும் அதன் வருமானமும் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகிறதா என கண்காணித்தல்
- வக்பு நிர்வாகத்திற்காக கட்டளையிடுதல்
- வக்புகளின் நிர்வாகத்திற்காக திட்டம் தீட்டிக்கொடுத்தல்
- வக்புகளின் கணக்கைத் தணிக்கை செய்வதற்கு ஏற்பாடு செய்தல், முத்தவல்லிகள் முன்வைக்கும் வரவு - செலவுக் கணக்கை ஆய்வுசெய்து ஒப்புதல் அளித்தல்
- வக்பு சட்டப்படி முத்தவல்லிகளை நியமித்தலும் நீக்குதலும்
- இழந்த வக்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்தல்
- வக்பு சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை நடத்துதல்
- வக்பு சட்டத்திற்கு உட்பட்டு வக்பு சொத்துக்கள் விற்பனை, குத்தகை, ஒத்தி, பரிமாற்றம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்குதல்
- வக்பு நிதியைப் பேணுவது
- வக்பு சொத்துக்கள் தொடர்பாக அவ்வப்போது வாரியத்திற்கு தேவைப்படும் தகவல்களை முத்தவல்லிகளிடம் கேட்டல்
- வக்பு சொத்துக்களின் தன்மை, பரப்பளவு ஆகியவற்றை ஆராய்ந்து அளவை செய்தல், முடிவு செய்தல்.
இவற்றைத் தவிர, அரசு வழங்கும் மானியத்தொகை மூலம் நலிவுற்ற வக்பு நிறுவனங்களைப் பழுது பார்ப்பதற்கும், மையவாடிகளில் சுற்றுச்சுவர் எழுப்புவதற்கும், உலமாக்கள் ஓய்வூதியம் வழங்குதல், 1986-ஆம்ஆண்டு முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டப்படி, மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களின் நலம் பேணுவதற்கான பணம் வழங்குதல் போன்ற பணிகளை வாரியம் செய்து வருகிறது.[2]
வக்புகள் கணக்கீடு
வக்பு சட்டம் 1995-ன் பிரிவு 72(1)-ன்படி ஒரு வக்பின் நிகர வருமானம் ரூபாய் ஐந்தாயிரம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அந்த வக்பு, வாரியத்திற்குச் சகாயத் தொகை செலுத்த வேண்டும். இவை கணக்கீட்டிற்குள் வரும் வக்புகள் ஆகும். நிகர வருமானம் ரூபாய் ஐந்தாயிரத்திற்குக் குறைவான வக்புகள் வாரியத்திற்கு சகாயத் தொகை செலுத்த வேண்டியதில்லை. இவை கணக்கீட்டிற்குள் வராத வக்புகள் ஆகும். வக்பு சட்டம் 1995ன் பிரிவு 72-ன்படி வக்பு சொத்துக்களின் வருமானத்தில் ஆண்டுதோறும் ஏழு விழுக்காட்டை, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வரியாக செலுத்தி, முறையான கணக்கு வழக்குகளை ஒப்படைக்க ஒவ்வொரு வக்பும் கடமைப்பட்டுள்ளது. இதிலிருந்து தவறுகிற வக்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வக்பு வாரியத்திற்கு அதிகாரம் உண்டு.
Remove ads
வக்பு சொத்துக்களின் மேம்பாடு
வெறுமையாக உள்ள வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும், அத்தகைய இடங்களை வணிகநோக்கில் மேம்படுத்தி, அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தைப் பல அறப்பணிகளுக்குப் பயன்படுத்தவும் ஒன்றிய வக்புக் குழு ஒன்றிய அரசிடமிருந்து ஆண்டுதோறும் உதவி பெறுகிறது. திட்டமல்லாத பணிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
1974 - 75-ஆம் ஆண்டுகளில் இருந்து இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநில வக்பு வாரியங்கள் வக்பு நிறுவனங்களுக்கென்று கடன் உதவி அளித்து வருகின்றன.
வக்பு நிலங்களில் திருமணக் கூடங்கள், மருத்துவமனைகள், குளிர்சாதனக் கூடங்கள், வணிகக் கட்டடங்கள் போன்றவற்றை அமைக்கவும் ஒன்றிய அரசு மாநில வக்பு வாரியங்களுக்கு வட்டி இல்லா கடனுதவி வழங்குகிறது. திருப்பிச் செலுத்திய கடன்கள், நிதி மூலதனமாகக் கணக்கிடப்படுகிறது. இந்த மூலதனத் தொகை மறுபடியும் சிறிய திட்டங்களுக்கு முன் கடனாக வழங்கப்படுகிறது.
Remove ads
வக்பு - கல்வித் திட்டம்
வக்பு குழு கடன் வழங்கும்போது இரண்டு விதிமுறைகளை முன்வைக்கிறது. அதன்படி, கடன் பெறும் வக்பு நிறுவனங்கள் கடன் உதவியில் ஆறு விழுக்காட்டுத் தொகையை கல்விக்கு நன்கொடையாக வழங்கவேண்டும். இந்தத் தொகை ஏழை இஸ்லாமியரின் கல்விக்காக செலவழிக்கப்படும். இரண்டாவதாக, கடனை திருப்பி செலுத்திய பிறகு கிடைக்கும் கூடுதல் வருவாயில் 40 விழுக்காட்டை கல்விக்காகச் செலவழிக்க வேண்டும்.
கடன் பெறும் வக்பு அமைப்புகளிடம் இருந்து பெறப்படும் ஆறு சதவிகித நன்கொடையும், சுழல் நிதிக்கு கிடைக்கும் வங்கி வட்டியும் சேர்த்து குழுவின் கல்வி நிதியம் அமைக்கப்படுகிறது. இந்த நிதி ஏழை மாணவர்கள் தொழில்நுட்பம், தொழில் கல்வி பயில்வதற்கு உதவித்தொகையாக வழங்கப்படும். பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தொழில் நுட்பம் மற்றும் தொழில் கல்வி, பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கு உதவித் தொகை வழங்க மாநில வக்பு வாரியத்திற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தொழிற்பயிற்சி மையங்களை அமைப்பதற்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.
Remove ads
வக்பு வாரியக் கல்லூரி
இந்தியாவில் வக்பு வாரியக் கல்லூரி மதுரையில் மட்டுமே உள்ளது. முகையத் ஷா சிர்குரோ வக்பு வாரியக் கல்லூரி என்னும் இக்கல்லூரி, 1964 முதல் செயல்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்கள் வரிசை
Remove ads
தற்போதைய வாரிய உறுப்பினர்கள்
- எம். அப்துல் ரஹ்மான் Ex.M.P.
- ஆளூர் ஷா நவாஸ், M.L.A
- ப. அப்துல் சமது, M.L.A
- அ. தமிழ் மகன் உசேன்
- பாத்திமா முசப்பர்
முந்தைய வாரிய உறுப்பினர்கள்
- அ. தமிழ் மகன் உசேன் தலைவர்
- முஹம்மது நசீமுதீன் இ.ஆ.ப.செயலர்
- எம். அப்துல் ரஹ்மான் Ex.M.P.
- ஜே. எம். ஆரூண்ரஷீத் Ex.M.P.
- ஏ. அஸ்லம் பாஷா Ex.M.L.A
- ஏ. முகம்மது ஜான் Ex.M.L.A
- குலாம்முஹம்மதுகான்
- சலாவுதீன் அய்யூபி
- S.A.பாரூக்
- A.S.பீபீஜான்
- M.K.கான்
- Dr.ஹாஜா
- K.மஜீது
- M.சிக்கந்தர்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads