தர்மம் எங்கே

ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

தர்மம் எங்கே
Remove ads

தர்மம் எங்கே (Dharmam Engey) 1972 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஏ. சி. திருலோகச்சந்தர் எழுதி இயக்கியுள்ளார். சாந்தி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பெரியண்ணா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். சிவாஜி கணேசன், ஜெயலலிதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் தர்மம் எங்கே, இயக்கம் ...
Remove ads

கதைக்களம்

இராஜசேகரன் (சிவாஜி கணேசன்) தனது கிராமத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்களைப் பறித்து விற்கும் தொழிலைச் செய்து வருகிறார். அந்த கிராமத்தை கொடுங்கோலன் மார்தாண்டன் (நம்பியார்) ஆட்டிப் படைக்கிறார். அவரிடம் இருந்து தன் கிராமத்து மக்களைக் காக்க இராஜசேகரன் போராடுகிறார். அவர் அதில் வெற்றிபெற்றாரா என்பதே கதையாகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

தர்மம் எங்கே, திரைப்படமானது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதற்கு முன் நடித்த தெய்வ மகன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான சாந்தி பிலிம்சில் தயாரிக்கப்பட்டது. மேலும் இத்திரைப்படம் இதற்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்த சிவந்த மண் திரைப்படத்தின் சாயலில் கதை அம்சத்தோடு படமாக்கப்பட்ட போதிலும் ரசிகர்களிடையே சிவந்த மண் திரைப்படத்தின் வெற்றியை முறியடிக்க முடியவில்லை பெரும் தோல்வி படமாக அமைந்தது. ஆனால் இப்படத்தின் பாடல்கள் கண்ணதாசன்[1] வரிகளில் இன்று வரை மிகவும் ரசித்து கேட்கும் பாடலாக காலம் கடந்தும் நிற்கிறது.

தர்மம் எங்கே திரைப்படம் தமிழ்நாட்டில் கடலூர்[2] மற்றும் ஏ.வி.எம். படப்பிடிப்புக் கூடம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.[3]

இசை

இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைக்க, பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[4]

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடகர் ...

வெளியீடும் வரவேற்ப்பும்

1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவேண்டிய தர்மம் எங்கே திரைப்படம்,[5] சூலை மாதம் 15ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.[6] படம் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது.[7] படம் இரண்டு நாட்களுக்கு மேல் ஓடவில்லை, இதன் விளைவாக, இது வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, படத்தின் தோல்விக்குக் காரணம், இதுபோன்ற படங்களுக்குப் பெயர் பெற்ற எம். ஜி. ராமச்சந்திரனுக்கே இது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று விமர்சகர்களும் திரைப்பட இரசிகர்களும் கருதினர்.[3] அந்த ஆண்டு வெளியான சிவாஜி கணேசனின் தோல்வியடைந்த ஒரே படம் இது மட்டும்தான்.[8] [9] படம் தோல்வியடைந்த போதிலும், 2022 இல், சினிமாபேட்டையைச் சேர்ந்த லட்சுமி கார்த்தி, இது சிவாஜி கணேசனின் மறக்கமுடியாத படங்களில் ஒன்றாக இன்றும் உள்ளது என்றார்.[10]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads