வேதாரண்யம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேதாரண்யம் (ஆங்கிலம்:Vedaranyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், வேதாரண்யம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இங்கு இருக்கும் மறைக்காட்டுநாதர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் திருமறைக்காடு என்பதாகும். கோடியக்கரை காப்பகம் இதன் அருகில் உள்ளது. வேதாரண்யம் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, நீடாமங்கலம் நீரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 8,665 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 34,266 ஆகும். அதில் 16,573 ஆண்களும், 17,693 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 86% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,068 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 என உள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 906 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,108 மற்றும் 69 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.17%, இசுலாமியர்கள் 8.93%, கிறித்தவர்கள் 0.74%, மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads