தாசேக் குளுகோர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாசேக் குளுகோர் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tasek Gelugor Railway Station மலாய்: Stesen Keretapi Tasek Gelugor); சீனம்: 打色牛汝莪火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு மாநிலத்தில் தாசேக் குளுகோர் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் தாசேக் குளுகோர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பினாங்கு மாநிலத்தின் தாசேக் குளுகோர் நகரில் இந்த நிலையம் உள்ளது.
Remove ads
பொது
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், தாசேக் குளுகோர் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 10 சூன் 2014-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது. இதற்கு முன்பு பன்னாட்டு விரைவு தொடருந்து சேவை (International Express) பயன்பாட்டில் இருந்தது.
தாசேக் குளுகோர்
தாசேக் குளுகோர் (Tasek Gelugor) நகரம், பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில்; அமைந்துள்ள நகரம். இந்த நகரம் வடக்கு-தெற்கு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. பாடாங் செராய் நகருடன் இணைக்கும் சாலைகளும் உள்ளன
பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து 41 கி.மீ. தொலைவில்; பட்டர்வொர்த் நகரில் இருந்து சுங்கை பட்டாணிக்குச் செல்லும் வழியியில் அமைந்துள்ளது. தவிர கெடா மாநிலத்தின் எல்லையில் அமைந்து உள்ளது.[2]
தாசேக் குளுகோர் ஏரி
தாசேக் குளுகோர் நகரத்திற்கு அருகில் இருந்த ஆறு அடிக்கடி நிரம்பியதால் ஓர் ஏரி (Tasik Gelugor) உருவாக்கப்பட்டது. அந்த ஏரியின் நினைவாக இந்த இடம் பெயரிடப்பட்டதாகக் கூறப் படுகிறது.[3]
இந்த நகருக்கு அருகாமையில் உள்ள நகரங்கள் கெப்பாலா பத்தாஸ், பெனாகா, லூனாஸ் மற்றும் புக்கிட் மெர்தாஜாம். இந்த நகர்ப் பகுதியில் இருக்கும் தாசேக் குளுகோர் தொடருந்து நிலையம், இங்கு வசிக்கும் மக்களுக்கு, தெற்கு நோக்கி பயணிக்க மற்றொரு மாற்று வழியாக விளங்குகிறது.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads