புக்கிட் மெர்தாஜாம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புக்கிட் மெர்தாஜாம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Bukit Mertajam Railway Station மலாய்: Stesen Keretapi Bukit Mertajam); சீனம்: 大山脚火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டம், புக்கிட் மெர்தாஜாம் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் புக்கிட் மெர்தாஜாம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பினாங்கு மாநிலத்தின் புக்கிட் மெர்தாஜாம் நகரில் இந்த நிலையம் உள்ளது. [2]
Remove ads
பொது
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், புக்கிட் மெர்தாஜாம் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.
பழைய நிலையத்திற்கு மேற்கே பெர்மாத்தாங் ராவா (Permatang Rawa) புறநகர்ப் பகுதியில் புதிய நிலையம் அமைந்துள்ளது. புக்கிட் மெர்தாஜாம் தொடருந்து நிலையத்திற்கு மின்சார தொடருந்து சேவை 11 சூலை 2015-இல் அறிமுகம் செய்யப்பட்டது.
கோலாலம்பூரில் இருந்து வரும் தொடருந்துகள் மதியம் 1:05 மணிக்கும், பாடாங் பெசாரில் இருந்து வரும் தொடருந்துகள் மாலை 5:15 மணிக்கும் வரும். புக்கிட் மெர்தாஜாம் தொடருந்து நிலையத்தின் தெற்கில் பாரிட் புந்தார் தொடருந்து நிலையம்; வடக்கில் சுங்கை பட்டாணி தொடருந்து நிலையம்; மேற்கில் பட்டர்வொர்த் தொடருந்து நிலையத்திற்கான கிளைப் பாதையும் உள்ளன.[3]
Remove ads
புக்கிட் மெர்தாஜாம் நகரம்
புக்கிட் மெர்தாஜாம் (Bukit Mertajam) பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். மலேசியாவில் தமிழர்கள் வரலாற்றுத் தடம் பதித்த முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். 1900-ஆம் ஆண்டுகளில் இங்கு வாழ்ந்த தமிழர்கள் இந்த நகரத்தை சுங்குரும்பை என்று அழைத்தார்கள்.
சுங்கை (Sungei) என்றால் மலாய் மொழியில் ஆறு; ரும்பை (Rumbai) என்றால் உயர்ந்த வகை வாசனைச் செடி. இத்தகைய வாசனைச் செடிகள் ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக இருந்ததால் சுங்குரும்பை என்று பெயராகியது. பிரித்தானியர்களும், சீனர்களும் புக்கிட் மெர்தாஜாம் என்று அழைத்தனர்.
செரோக் தெக்குன் கல்வெட்டு
செபராங் பிறை மாவட்டத்தின் நிர்வாக மையமாக விளங்கும் புக்கிட் மெர்தாஜாம்; அண்மைய காலங்களில் அபிரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. அதே சமயத்தில் மக்கள் தொகையும் பெருகி வருகிறது. 2019-ஆம் ஆண்டில் அதன் மக்கள் தொகை 212,300. [4]
இங்குதான் 1845-ஆம் ஆண்டில் செரோக் தெக்குன் கல்வெட்டு நினைவுச் சின்னம் (Cherok Tok Kun Inscription) கண்டுபிடிக்கப்பட்டது. பல்லவம்; தமிழ்; சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட கி.பி. 600-ஆம் ஆண்டுக் காலத்துக் கருங்கல் கல்வெட்டு. ரமணிபரன் எனும் ரமவுனிபா பல்லவ மன்னர் ஆட்சி செய்ததை அந்தக் கல்வெட்டு நினைவூட்டுகிறது. [5]
புக்கிட் மெர்தாஜாம் எனும் பெயர் மெர்தாஜாம் மலை எனும் பெயரில் இருந்து மருவியதாகச் சொல்லப் படுகிறது. மலாய் மொழியில் மெர்தாஜாம் என்றால் கூர்மை என்று பொருள். புக்கிட் மெர்தாஜாம் என்றால் கூர்மையான மலை என்று பொருள்.[6][7] மெர்தாஜாம் மலையின் உச்சிப் பாகம் மிக கூர்மையான நிலப்பரப்பைக் கொண்டு இருந்ததால் அதற்கு அந்தப் பெயர் வந்ததாகச் சொல்லப் படுகிறது.[6]
Remove ads
காட்சியகம்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads